Thursday, March 24, 2011

கடல்தாண்டிக் கண்டம் கடந்தும் கன்னித் தமிழ் வளர்க்கும் பிரான்ஸ் – புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

தாய்மண்ணைவிட்டு அகதியாகப் புலம்பெயர்ந்து வந்தபோதும், அந்த தாய்மண்ணின் பற்றும், தமிழ்மீது கொண்ட பாசமும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வதை பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. அதற்குச் சாட்சியாகப் பிரான்ஸ் – புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பலவருடங்களாகத் தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது. புலம்பெயர்ந்து தமது கிராமத்து மக்களை ஒன்றிணைத்து அவர்களின் மூலம் தாயகத்தில் தவித்துநிற்கும் தமது உறவுகளின் துயர் களையத் தம்மாலான பணிகளை முன்னெடுக்கும் அதே வேளை, தமிழ்வளர்கும் பணியிலும் ஓர் தனிதர்துவமான செயற்பாட்டைக், கடந்தவருடம் முதல் மேற்படி ஒன்றியம் செயற்படுத்தும் பாங்கு சிறப்பு மிக்க பணியாக உள்ளது.

அந்த வகையில், முத்தமிழ் விழா என்னும் சிறப்பான விழாவினைக் கொண்டாடி அதன் முன்னோடி நிகழ்வுகளாக புலம்பெயர் இளம் சந்ததியினரிடையே தமிழ்உணர்வை வளர்க்கும் வகையில் திருக்குறள் மனனப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மொழிபெயர்ப்புத்திறன்போட்டி எனப் பல்வகைப் போட்டி நிகழ்வுகளை நடத்தி, விழாவெடுத்துப் பரிசில்வழங்கிச் சிறப்பிக்கும் வகையில் தமக்கென தனித்துவமான ஓர் முத்திரை பதித்து வருவது புலம்பெயர் தமிழுணர்வாளர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு, இளம்சந்ததியினரிடையே வளர்ந்துவரும் கலையார்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் குறும்படப்போட்டியினையும் நடத்தி அதற்கும் பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கி அவர்களது கலை வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து வரும்பாங்கு ஓர் தனித்துவம் மிக்கதாகும் அந்த வகையில், இந்த வருடமும் ஒன்றியம் தனது அறிவுத்திறன் போட்டியையும், குறும்படப் போட்டியையும் மேலும் சிறப்பாக நடத்த முன்வந்துள்ளதை உலகத்தமிழரிடையே பரிமாறிக்கொள்வதுடன் இந்நிகழ்வு மேலும் சிறப்புற www.pungudutivu.info சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேம்.
மேற்படி போட்டி நிகழ்வுகளுக்கான விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தைப் கீழ் காணும் இணைப்பில் பெற்றுகொள்ளலாம்.

http://www.pungudutivu.info/2011/02/2011.html

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP