Thursday, March 24, 2011

நா.க.தமிழீழ அரசின் பிரதிநிதியாக ஐ.நா.சபையில் முழங்கிய புங்குடுதீவை சேர்ந்த சிறிசஜீதா.

ஐக்கிய நாடுகள் சபை லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர்கள் விடயத்தில் வெளிக்காட்டவில்லை என ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில்தாயகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவரும் சுவிட்சர்லாந்தின் செங்காலன் கோட்டப் பகுதியில் அமோக வெற்றி பெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி யாக தெரிவானவருமான சிறிசஜீதா சிவராஜா பங்கேற்று தாயகத்துக்காக தனது ஆணித்தரமான கருத்தை முழுமூச்சாக முழங்கி உள்ளார் .

தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

இறுதிக்கட்ட போரின்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.

40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்காலம் என்று ஐ.நா அதிகாரிகள் கூறியிருந்தபோதும் ஐ.நா அதிகாரிகள் அமைதி காத்தனர்.

இன்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புக்குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என கூறுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா தெரிவித்தார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16ஆவது கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பொது நிலவரங்களுக்கான பிரிவில் தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளாக சுகிந்தன் முருகையா, ஜனர்தனன் புலேந்திரன் (சந்தோஸ்), சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று தமிழ் மக்களின் நிலைமை போர்க்காலத்திலும் பார்க்க மோசமாகவுள்ளது.

சிங்கள அரசு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினை குற்றஞ்சாட்டுவதிலும் அவர்களது ஜனநாயக நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

உலக நாடுகள் தமிழ் மக்களிற்கு உதவிடும் என நம்புவதாகவும் இலங்கையின் நடவடிக்கைளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் சிறிசஜீதா சிவராஜா வேண்டுகோள் விடுத்தார்.

சிறிசஜீதாவின் இந்த முயற்சியை புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகளை தெரிவிப்பதோடு ,அவரது இது போன்ற தாயகப் பணிகள் மென்மேலும் சிறப்பாக அமையவேண்டும் என்று வாழ்த்துகின்றோம் .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP