புங்குடுதீவு கலைஞனின் நடிப்பில் 24 சர்வதேச விருதுகளோடு வெளிவரவிருக்கும் கயிறு.
தமிழகத்தில் கால்பதித்து இத்தனை வருடங்கள் கடுமையான போராட்டங்களையும் அலைச்சல்களையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்து கிட்டத்தட்ட ஏழு வருட போராட்டத்தில் “வாண்டு” எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
வாண்டு திரைப்படம் வெளியான சமயத்தில், தென்னிந்திய பிரபல நடிகர்களது பெரிய படங்கள் வெளிவந்த போதிலும், ஈழத்துக் கலைஞனான குணாவிம் நடிப்பில் வெளிவந்த வாண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றுப்பெற்றது.
இதையடுத்து ஒரு தமிழ்க் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜமால் முகம்மது தயாரிப்பில் உருவான “கயிறு” எனும் திரைப்படத்தில் கதாநாயகான நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் 13ம் திகதி திரைக்கு வரவிருக்கும் இக் கயிறு திரைப்படத்திற்கு 24 சர்வதேச விருதுகளும், அமெரிக்கா மெக்ஸ்சிகோ மற்றும் கல்கத்தாவிலும் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கயிறு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை (Trailer) இயக்குனர் வெங்கட்பிரபு நேற்று முன்தினம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இப் படத்தின் நடிகரான குணா, கனடா வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இப்படத்திற்கு இணைத் தயாரிப்பாளரானார் எனத் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments:
Post a Comment