Tuesday, March 3, 2020

புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்ட கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்

கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் ஆனது
25 வது ஆண்டில் கால்பதித்த தருணத்தில்
2020 ஆம் ஆண்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணன் விஜயகுமாரன் இளையதம்பி அவர்களை வாழ்த்துவதுடன்

அனைவராலும் விஜயன் அண்ணா என்று அழைக்கப்படும் பண்பாளர்
இருபத்தைந்து ஆண்டுகள் சங்கத்தின் வரலாறு
பலதரப்பட்ட தலைவர்களின் செயல்பாடுகளால்
பல சிறப்புக்களையும் ஒரு சில விமர்சனங்களையும்
கண்டுள்ளது ஆனாலும் தற்போதைய தலைவர் அவர்கள்
தன்னால் முடிந்தவரை அனைவருடனும் மென்மையான
போக்கை கடைபிடித்தவர் புன்னகை என்றும் அவருடைய அடையாளம் கோபத்தை அவர்முகத்தில்
நான் கண்டதில்லை

ஆனாலும் அவருக்கான பொறுப்புக்களும் சுமைகளும் இவ்வாண்டில் ஏராளம்
அனைத்து புங்குடுதீவு சொந்தங்களும் அவருக்கு உறுதுணையாக தோழோடு தோழ் நின்று உதவிட
வேண்டும் .விமர்சனங்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல ஆனாலும்
ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஊக்கங்களையும்
வழங்கிட வேண்டுகின்றேன்

இருபத்தைந்தாவது ஆண்டில் வரலாற்று சாதனையை
நிகழ்த்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்
தலைவர் என்பவர் தன்னுடைய ஆளுமையை எப்பொழுதும் தனியொருவருக்காகவோ அல்லது வேண்டப்பட்டவருக்காகவோ விட்டுக்கொடுக்க கூடாது
என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும்
எண்ணங்களை சக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயல்பட்டால் வெற்றி நமதே
25 வது விழா மேடையை பிரமாண்ட கலைமேடையாக
உப தலைவர் வில்வ மோகன் அவர்களும் சக உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தலைவருக்கு
வெற்றி மேடையாக வழங்குவார்கள் என்று நம்புவோமாக!!!!
அன்பிநிறை
தமிழரசன்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP