Tuesday, May 17, 2016

புங்குடுதீவு தாயகம் நூலக திறப்பு விழாவினைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா..!!

யாழ். புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம் அமைப்பின் *தாயகம் நூலகம்" என்ற பெயரிலான நூலகத் திறப்புவிழா கடந்த (30.04.2016) சனிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் திருமதி. த.சுலோசனாம்பிகை (பிரதம போசகர், தாயகம் சமூக சேவையகம், புங்குடுதீவு) அவர்களது தலைமையில் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.
 
மேற்படி நூலகத்தினை புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளருமான திரு. இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்திருந்தார்.

தாயகம் நூலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக சென்று புங்குடுதீவு “அம்பலவாணர் அரங்கில்” தாயகம் அமைப்பின் சார்பில் கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா போன்ற பல நிகழ்ச்சிகள் என்பன சிறப்பாக நடைபெற்றன.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளருமான திரு. இளங்கோவன், திரு. பாலச்சந்திரன் கஜதீபன் (வட மாகாணசபை உறுப்பினர்), திரு. விந்தன் கனகரட்ணம் (வட மாகாணசபை உறுப்பினர்) ஆகியோரும்,

சிறப்பு விருந்தினர்களாக திரு. எஸ்.கே. சண்முகலிங்கம், (முன்னாள் அதிபர், தவிசாளர் வேலணை பிரதேச மத்தியஸ்த சபை மற்றும் தாயகம் சமூக சேவையகம் பிரதம ஆலோசகர்), திரு. எஸ் சிவா (கிராம சேவகர், புங்குடுதீவு, ஜே25 பிரிவு), செல்வி. ச.ஜனகா (கிராம சேவகர், புங்குடுதீவு, ஜே26 பிரிவு) ஆகியோரும்,

கௌரவ விருந்தினர்களாக  செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு (ஆசிரியை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர், -தாயகம் சமூக சேவையகம்), திரு.பரமலிங்கம் தர்சானந், (நல்லூர் பிரதேச கிராம சேவையாளர்), திரு.அபிராஜ் வசந்தகுமார் (சுகாதார பரிசோதகர்), திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (இயக்குனர் “படைப்பாளிகள் உலகம்”), திரு.சி. சாந்தகுமார் (நேசன் புடவையகம், புங்குடுதீவு), திரு. விவேக் ராகுலன் (புங்கையின் புதிய ஒளி), திரு. கு.கயிலைமலைநாதன் (புங்குடுதீவு நலன்விரும்பி – சுவிஸ் லீஸ்), திரு. மன்மதராசா தர்சன் (சிவலைப்பட்டி சனசமூக நிலையம்), செல்வி. பவிஷானா, (தலைவர், -தாயகம் சமூக சேவையகம்), செல்வி காஞ்சனா (செயலாளர், தாயகம் சமூக சேவையகம்),  திருமதி கேசவராஜா சசிகலா (சமூக நலன் விரும்பி), திரு.பொன் வைரமுத்து (முன்னாள் உதவிக் காணி ஆணையாளர் கிளிநொச்சி), திரு.செல்லத்துரை உதயகுமார் (சமூக நலன் விரும்பி லண்டன்), ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேற்படி நிகழ்வின் நிகழ்ச்சிகள் யாவற்றையும் முன்னாள் அதிபர் திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களுடன் இணைந்து திரு.விவேக் ராகுலன் தொகுத்து வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்விற்கு தலைமை தாங்கிய திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தலைமையுரையினை ஆற்றினார்.

அவர் தனதுரையில், தாயகம் அமைப்பு இதுவரையில் மேற்கொண்டிருக்கும் சேவைகள் பற்றியும், தாயகம் சமூக சேவையகமானது தனிப்பட்டவர்களின் வியர்வையே. ஆகவே, தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார். (அதுகுறித்த விரிவாக உரை கீழே உள்ளது….)

வரவேற்புரையினை செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு அவர்கள் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் விசேட முதன்மைச் சித்திபெற்ற புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவி செல்வி ரஞ்சித்குமார் தர்சனா "தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால்" கௌரவிக்கப்பட்டு, பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதேபோன்று திரு. ஐங்கரன் கதிர்காமநாதன் (இயக்குனர் “படைப்பாளிகள் உலகம்”), திரு.சி. சாந்தகுமார் (நேசன் புடவையகம், புங்குடுதீவு), திரு. கு.கயிலைமலைநாதன் (புங்குடுதீவு நலன்விரும்பி – சுவிஸ் லீஸ்) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பிரதம விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டிருந்த புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளருமான திரு. இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்...

அவர் தனதுரையில், பெண்களின் சமத்துவம், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் என்பன பற்றி பேசியதோடு, புங்குடுதீவில் தாயகம் அமைப்பின் செயற்பாடுகள் சிறப்பாகவுள்ளது எனவும், அது தொடர்ந்தும் செயலாற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திரு. எஸ் சிவா (கிராம சேவகர், புங்குடுதீவு, ஜே25 பிரிவு) அவர்கள் உரையாற்றுகையில்,..
ஒப்பீட்டளவில் புங்குடுதீவின் கிழக்குப் பகுதியான கிழக்கூர் பின்னடைந்துள்ளது என்றும், இது குறித்து புலம்பெயர்ந்து வாழும் இப் பிரதேசத்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கூறினார்.

தொடர்ந்து திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (இயக்குனர் “படைப்பாளிகள் உலகம்”) அவர்கள் தனதுரையில்,
சில புங்குடுதீவு அமைப்புக்களின் செயற்பாடுகள் சரியானமுறையில் இல்லை என்கின்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் தற்போது இந்நிகழ்வினைப் பார்க்கும் போது, சில நேர்மையான நல்லுள்ளங்களை இங்கு பார்த்தேன். இதில் எனக்கு நீண்ட நம்பிக்கை கிடைத்தது. அத்துடன் இந்த தாயகம் நூலகத்திற்கு படைப்பாளிகள் உலகத்தினால் 3ஆயிரம் புத்தகங்கள் வரை விரைவில் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று குறிப்பிட்டார்.


இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்,...
தாயகத்தின் சேவைகளைப் பற்றி எடுத்துக்கூறியதோடு, இங்கு தலைமையுரை ஆற்றிய திருமதி  தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் முகநூல்கள் குறித்தும், சில விமர்சனங்களைப் பற்றியும் மிகவும் கவலையுடன் ஆவேசப்பட்டார். ஒன்றை மட்டும் நான் இங்கு தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். "காய்க்கும் மரம்தான் கல்லடி படும், இன்று சமூக நலவாதிகளை சமூக விரோதிகள் என்று பலரும் விமர்சனம் செய்வது இயல்பு. ஆகவே, முகநூல் விமர்சனங்களைக் கணக்கில் எடுக்காது நாம் உளமாற நேர்மையுடன் செயற்பட்டால் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பிரதம விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்டிருந்த வட மாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்கள் உரையாற்றும் போது,...
"எனது மாகாணசபை நிதியில் 60லட்சம் ரூபா வரையில் வீதிக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை புங்குடுதீவின் வீதி திருத்த வேலைகளுக்கு நான் ஒதுக்கியுள்ளேன் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்த மண்ணிலிருந்து எம்மைத் தெரிவு செய்த உங்களுக்கான உதவிகள் தொடர்ந்தும் எங்களால் முன்னெடுக்கப்படும். மாணவ, மாணவிகளான நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதே இதுபோன்ற சேவைகளை செய்யும் புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு" என்று தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்டிருந்த திரு. பாலச்சந்திரன் கஜதீபன் அவர்கள் உரை நிகழ்த்துகையில்,...
"புங்குடுதீவு மக்கள் என்பதை விட தீவக மக்கள் அனைவருமே பெருமைக்கும், மதிப்புக்கும் உரியவர்கள். அந்தப் பெருமையை இங்குள்ள மாணவ, மாணவிகளும் சாதித்துக் காட்ட வேண்டும். புங்குடுதீவு மண்ணை மீண்டும் தலைநிமிர்ந்த மண்ணாக மாற்ற அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டுமென" தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து சுவிஸிலுள்ள "சுவிஸ் ராகம்" கரோக்கி இசைக்குழுவின் "சுவிஸ் ராகம் உதவும் கரங்கள்" அமைப்பின் சார்பாக புங்குடுதீவு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்கு தலா 5ஆயிரம் ரூபாய் வீதம் 40 மாணவர்களுக்கு பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு வங்கிப் புத்தகம் அந்த மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதோடு, மேற்படி உதவியை வழங்கிய "சுவிஸ் ராகம் உதவும் கரங்கள்" அமைப்பைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


அதேபோன்று புங்குடுதீவு தாயகம் அமைப்பின் சொக்கலிங்கம் அகடமியில் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பெறுமதியான புத்தகப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேற்படி புத்தகப்பைகளை சுவிஸில் அமரத்துவமடைந்த செல்வி. பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஞாபகார்த்தமாக, சுவிஸ் சூரிச்சில் வதியும் அவரது சகோதரியான திரு. திருமதி பன்னீர்ச்செல்வம் சிவநிதி குடும்பம் வழங்கியிருந்தது. அவர்களுக்கும் இங்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


அதேபோன்று தாயகம் நூலகத் திறப்பு விழாவினை முன்னிட்டு புங்குடுதீவின் அனைத்துப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியகளுக்காக நடாத்தப்பட்ட பொதுஅறிவுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கும், கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. இதற்குரிய அனுசரணையினை "தாயகம் சமூக சேவையகம்" முழுமையாகப் பொறுப்பேற்றிருந்தது.


இவை மாத்திரமல்லாது தாயகம் நூலகத்துக்கு அமரர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து ஆகியோரின் ஞாபகார்த்தமாக கொழும்பு புதுச்செட்டித்தெருவில் வதியும் செல்லத்துரை சிதம்பரநாதன் அவர்கள் பத்தாயிரம் (10,000) ரூபாய் பெறுமதியான புத்தங்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.


அதேபோன்று, ஊரைதீவைச் சேர்ந்த அமரர்களாகிய சுப்பிரமணியம் மீனாட்சி அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவில் வதியும் சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் ஐயாயிரம் (5.000 Rp) ரூபாய் பெறுமதியான புத்தங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.


அதேபோன்று, வல்லனைச் சேர்ந்த அமரர்களாகிய குணரெட்னம் புவனம் அவர்களின் ஞாபகார்த்தமாக சுவிசில் வதியும் திரு. கு.கயிலைமலைநாதன் அவர்கள் ஐயாயிரம் (5.000 Rp) ரூபாய் பெறுமதியான புத்தங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.


**இவர்கள் அனைவருக்கும் இந்நிகழ்வின் போது நன்றி தெரிவிக்கப் பட்டது. அத்துடன் மேற்படி நூலகத் திறப்புவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் யாவற்றுக்கும் பெரிதும் உதவிய திருமதி அமரரெட்னம் டெலாகுணவதி, திருமதி ஜெகதாஸ் மேரிலயோனா, திருமதி யோகநாதன் மரிஸ்ரெல்லா, திரு. ஜெகதாஸ் (மயூரன்), திரு. வேதநாயகம் கோபி, திரு. அமலரட்ணம் வினோஜன், திரு.பாரூக் சிஹான் (ஊடகவியாளர்) மற்றும் வேலணை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு. மதுஷன், திரு. சாந்தகுமார், திரு. சிறி உட்பட பலருக்கும் தாயகம் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


** நிகழ்விற்கு தலைமை தாங்கிய திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் ஆற்றிய தலைமை உரையில்...,


புங்குடுதீவில் (பன்னிரெண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் அகடமி எனும் இலவசக் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் நிறைவு விழாவையும், அதேவேளை புங்குடுதீவு மக்கள் அனைவருக்கும் பயன்தரக் கூடிய வகையில் அதே சொக்கலிங்கம் குடும்பத்தால் புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டே "புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்" அமைப்பினால், புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் "புங்குடுதீவு தாயகம் நூலகம்" என்ற பெயரில் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தால், 04.10.2014 அன்று இதே புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு மைதானத்தில் கலை நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டியும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. இதனை தாயகம் சமூக சேவை அகத்தை சேர்ந்த லண்டனில் வதியும் திரு. திருமதி பரமகுமரன் ரோகினி தம்பதிகளின் புதல்வன் செல்வன் கிஷாந்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவர்களால் வழங்கப் பட்டது.


2014 மார்கழி மாதம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பாடசாலை அனைத்து மாணவர்களுக்குமான சீருடை தாயகம் சமூக சேவை அகத்தின் அனுசரணையில் வழங்கப் பட்டது. இதுக்கான நிதிப் பங்களிப்பை முன்னாள் அதிபர் திரு.வைத்தியலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, அவரது மருமகன் திரு.கணேஷமூர்த்தி ஆசிரியரால் வழங்கப் பட்டது.


2014இல் "முதியோர் தினம்" புங்குடுதீவில் நினைவு கூறும் முகமாக, புங்குடுதீவு ஜே26 கிராம சேவகர் பிரிவில் உள்ள முதியோருக்கான உடுப்புக்கள் தாயகம் சமூக சேவை அகத்தின் அனுசரணையில் வழங்கப் பட்டது. இதுக்கான நிதிப் பங்களிப்பை அமரர்கள் செல்லத்துரை சிவக்கொழுந்து ஆகியோரின் ஞாபகார்த்தமாக திரு. செல்லத்துரை சிதம்பரநாதன் அவர்களினாலும், அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் ஆகியோரின் ஞாபகார்த்தமாக திரு.திருமதி சஷ்பாநிதி ஜெயா குடும்பத்தால் வழங்கப் பட்டது.


வேலணை பிரதேச செயலர் திருமதி.சதீசன் மன்சுலாதேவி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கிய வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்துக்கு, ஒலிவாங்கிகளை பொருத்துவதற்காக "தாயகம் சமூக சேவை அகத்தினால்" 1.49.000.00 (ஒரு இலட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் ரூபா) வழங்கப்பட்டு உள்ளது.


தாயகம் சமூக சேவை அகத்தின் அனுசரணையில் புங்குடுதீவு கணேஷ மகா வித்தியாலய 2015ம் ஆண்டு விளையாட்டுப் போட்டியின் போது அமரர்கள் சேனாதிராஜா தெய்வநாயகி அவர்களின் ஞாபகார்த்தமாக திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களினால் வெற்றிக் கிண்ணம் ஒன்று வழங்கப்பட்டது.


தாயகம் சமூக சேவை அகத்தின் அனுசரணையில் புங்குடுதீவு அமெரிக்க மிஷன் வித்தியாலய இவ்வருட விளையாட்டுப் போட்டியின் போது அமரர் கந்தையா தனபாலன் அவர்களின் ஞாபகார்த்தமாக திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களினால் இரண்டு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.


தாயகம் சமூக சேவை அகத்தின் அனுசரணையில் புங்குடுதீவு மகா வித்தியாலய 2015ம் ஆண்டு விளையாட்டுப் போட்டியின் போது அமரர்கள் சேனாதிராஜா தெய்வநாயகி அவர்களின் ஞாபகார்த்தமாக திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களினால் வெற்றிக் கிண்ணம் ஒன்று வழங்கப்பட்டது.


மேற்படி "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பினால், புங்குடுதீவையும் தாண்டி வன்னிப் பிரதேச மக்களுக்கும் உதவி புரிய வேண்டுமெனும் நோக்கில், வவுனியா பொது வைத்தியசாலைக்கும், வவுனியா சிதம்பரபுரம், ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கும் மட்டுமல்லாது முல்லைத்தீவு வைத்தியசாலைக்கும் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி உதவிகளை சொக்கலிங்கம் குடும்பத்தில் ஒருவரான சுவிசில் உள்ள ரஞ்சனும் அவரது நெருங்கிய நண்பர்கள், மற்றும் உறவுகளான குழந்தை, குமார், தயா, பன்னீர், அப்பன் ஆகியோர் இணைந்தே மேற்கொண்டனர்.


அதேபோல், இவர்களினால் புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் அனுசரணையில், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய பாடசாலை கூரைத்திருத்த வேலைக்காக, சிறியதோர் நிதிப் பங்களிப்புச் செய்யப்பட்டது.


இது மட்டுமல்லாது, புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் உதவியில், கடந்த வருடம் புங்குடுதீவின் அனைத்து மாணவ, மாணவிகளின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” பங்களிப்புடன் புங்குடுதீவில் நடாத்தப்பட்டது.


அத்துடன் புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ மாணவிகளின் போக்குவரத்து சேவைக்காக புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துடன் இணைந்து "தாயகம்" அமைப்பும் ஒரு பெரும்தொகை பணத்தை வழங்கி உதவி புரிந்தனர்.


அத்துடன் "தாயகம் நூலகம்" திறப்பு விழாவுக்குரிய செலவினை அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் பேரப்பிள்ளைகளான செல்வி.தேனுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு யோகலிங்கம் மீரா (பாபு -லண்டன்) குடும்பமும், திரு.திருமதி ஆனந்தன் கிரிஷா அவர்களின் செல்வப்புதல்வன் ஆதேஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆனந்தன் குடும்பமும், திருமதி.ஜெனனியின் பிறந்ததினத்தை முன்னிட்டு டொக்ரர் ஜெனனி தயாபரன் (லண்டன்) குடும்பமும், திரு.திருமதி ரவி வசந்தா தம்பதிகளும்,  திரு.இந்திரன் குடும்பமும், மூத்த புதல்வர் கருணைலிங்கத்தின் (கண்ணன் -லண்டன்) பிறந்த தினத்தை முன்னிட்டும் வழங்கப்பட்டு இருந்தது.


இதை விட, "தாயகம் சமூக சேவை அகமானது", அமரர்களான புங்குடுதீவு சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் மக்கள், மருமக்களினால் உருவாக்கப்பட்டு, அவர்களின் நிதிப்பங்களிப்பில் மட்டுமே நடைபெற்று வருகிறது. தற்போது தாயகத்தின் சேவை கண்டு, அவர்களின் ஒருசில உறவுகளும், ஒருசில நண்பர்களும் தனிப்பட்ட ரீதியில் பங்களிப்பு செய்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை என்பதை அனைத்து மக்களுக்கும் முன்னிலையில் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றி.. என்றார்.


மேற்படி "தாயகம் நூலகமானது" 01.05.2016 (நேற்று முன்தினம்) முதல் தினமும் காலை 7.30மணிமுதல் 11.30மணிவரையும், மாலை 2.30மணிமுதல் 5.30வரையிலும் திறந்திருக்கும் எனவும், மாணவ, மாணவியர்க்கான புத்தகங்களும், பொதுமக்களின் நன்மை கருதி நான்கிற்கும் மேற்பட்ட தினசரி பத்திரிகைகள் தினமும் அங்கு வைக்கப்படுமெனவும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.


*** அனைத்து வீடியோக்களையும் பார்வையிட... ***


"தாயகம் நூலகம்" வரவேற்புரை, தலைமையுரை, மாணவி செல்வி. தர்சனா கௌரவிப்பு..
https://www.youtube.com/watch?v=KyBJeuAv4EY  


"தாயகம் நூலகம்" புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளருமான திரு. இளங்கோவன் உரை..

https://www.youtube.com/watch?v=g8wmg1zsHfI 


"தாயகம் நூலகம்" திரு. எஸ் சிவா (கிராம சேவகர், புங்குடுதீவு, ஜே25 பிரிவு), திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (இயக்குனர் “படைப்பாளிகள் உலகம்”) ஆற்றிய உரை..

https://www.youtube.com/watch?v=NJQ9jdZ79Co


"தாயகம் நூலகம்"கலைநிகழ்ச்சி, வட மாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்கள் ஆற்றிய உரை..

https://www.youtube.com/watch?v=iqNnGAJMz4Q


"தாயகம் நூலகம்"கலைநிகழ்ச்சி, திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை..

https://www.youtube.com/watch?v=XiIuWmWfWsg


"தாயகம் நூலகம்" வட மாகாணசபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் கஜதீபன் அவர்கள் ஆற்றிய உரை..

https://www.youtube.com/watch?v=nRQq_s9Xld0



"தாயகம் நூலகம்" கலைநிகழ்ச்சிகள் & பரிசளிப்பு விழா...

https://www.youtube.com/watch?v=7Tv7EuesQ8I&feature=youtu.be



"தாயகம் நூலகம்" திறப்பு விழா நிகழ்ச்சி..!!

https://www.youtube.com/watch?v=f_kSTGg6Ecg&feature=youtu.be 


*** "தாயகம் நூலகம்" திறப்பு விழா & கலைநிகழ்ச்சி & பரிசளிப்பு விழாக்கள் போன்ற அனைத்து புகைப்படங்களையும் வீடியோவில் பார்வையிட...

https://www.youtube.com/watch?v=9URMJjeDhnk  

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP