1 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!!
கனடாவில்
வசிக்கும் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச்
சேர்ந்த திரு திருமதி ஆரூரன் - சயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(10.05.2016)
செல்வத்துள் செல்வம் அம்மா. எங்கள் பிள்ளை!
சீராளன் வந்துதித்தான் எங்கள் மடியில்,
வையத்துள் பிறந்தின்று ஒராண்டாகும்,
வானத்தின் மதி நிலவே! வளர்ந்து வாடா!
இங்கு நடந்து வாடா!
குலப்பெருமை காக்க வந்த கோமகனே!
எங்கள் கோகுலனே! இந்த
நிலப்பரப்பில் நீ எங்கும் நிறைந்து வாழ்க!
எங்கள் மனம் மகிழ்ந்து வாழ்க!
கண் ஒளிகள் கதிர் வீச கவலை போக்கும்
கடவுள் அறை வந்து உனது கைகள் கூப்பும் ,
தண்ணொளியாய் உன் மேனி எம்மில் தாவும் .
தமிழ் மகனே! அர்ஜுனே! தலை நிமிர்க!
இங்கு தலை நிமிர்க!
பொன் மணியாய் பூத்து வந்த புது மலரே!
எங்கள் புது மலரே!
பொலிவுடனே,புகழுடனே வளர்ந்து வாடா !
இங்கு நிமிர்ந்து வாடா!
அன்புடனே அணைத்தெடுக்கும் உறவுக்கூட்டம் !
ஆடி வரும் உனது அழகைப் பார்க்க வேண்டும் !
ஐயா! உனது ஆசைமிகு மழலை மொழி
கேட்க வேண்டும் !
தென்னவனும் சிவனாரின் திருவருளும்,
தேவி மகா மாரியம்மன் திருவருளும்
வண்ண முக முருகனவன் துணையருளும்,
வழி விடவே,உன்னை என்றும் காத்து நிற்க!
மன்னவனே! எம் குழந்தை வாழியவே!
பல்லாண்டு வாழியவே! என்று மனம்
திறந்து வாழ்த்துகின்றோம்
வாழ்த்தும் உறவுகள் சார்பில் ,
அன்பு பேரன் C .O குணரத்தினம்
குடும்பம்.
கனடா
0 comments:
Post a Comment