ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..!! (படங்கள் இணைப்பு)
சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக கடந்த முதலாம் திகதி (01.02.2016) அன்று வவுனியா பொது வைத்த்யசாலைக்கு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் நேற்றுமுன்தினம் (03.02.2016) “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் வவுனியா ஓமந்தை, நவ்வி(பாலமோட்டை), புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒருதொகுதி பொருட்கள் நேற்றுமுன்தினம் (03/02/2016) அன்பளிப்பு செய்யப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் நேரடியாக கையளித்தார்கள்.
இவ் நிகழ்வுகளில் நவ்வி (பாலமோட்டை) பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு. எஸ்.சூரியகுமார், ஓமந்தை பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு. எஸ்.மதுரகன், நெடுங்கேணி பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு. கே.முபாரிஸ், புளியங்குளம் பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு. கோபி மோகன், கழகத்தின் உறுப்பினர்களான திரு. எஸ்.சுகந்தன் திரு. எஸ்.கஜூரன், திரு. எஸ்.ஜனகன், திரு. பி.ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய சுவிஸ் நிர்வாகசபை உறுப்பினர்களுள் ஒருவரும், சமூக ஆர்வலருமான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316, 3073GUMLIGEN) விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட சமையலறை உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், கடந்தமாதம் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்” சுவிஸ் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும்,
இந்த வகையில், இப்பொருட்களை மனமுவந்து தந்த சிலோவா வைத்தியசாலை (Stifftung Klinik SILOAH, Worb Str-316, 3073GUMLIGEN) நிர்வாகத்துக்கும், மேற்படி பொருட்களைப் பெற்றுத் தந்த திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களுக்கும், அவற்றை ஏற்றி, இறக்க உதவி செய்த திரு.குழந்தை, திரு.குமார், திரு.தயாபரன், திரு.சதீஸ் (பாடேன்), திரு.சஞ்சய் ஆகியோருக்கும், பொருட்களை ஏற்றி, இறக்கியதுடன், அவற்றைப் பொதி செய்யவும் முழுமையாக உதவிய திரு.குழந்தை, திரு.குமார், திரு.தயாபரன் ஆகியோருக்கு மனப்பூர்வமான எமது நன்றிகளை புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம் சார்பில் தெரிவிவிக்கப்பட்டது என்பதும்,
இதேவேளை இவற்றை, புங்குடுதீவை சேர்ந்தவர்களும், சுவிஸ் பேர்ன் ஷோன்புள் எனும் இடத்தில் வசிப்பவர்களுமான செல்வன் கிருஷாந் அவர்களின் 18வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான திரு.திருமதி கிருபா,வனி தம்பதிகளும்,
புங்குடுதீவு & வன்னியை சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச்சில் வசிப்பவர்களுமான அமரர் “செல்வி பரஞ்சோதி செல்வநிதி”யின் நினைவை ஒட்டி அவரது சகோதரியான திரு.திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரும்,
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர்கள் வேலுப்பிள்ளை (முன்னாள் சர்வோதய ஊழியர்), இராசம்மா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுவிஸ் ஒபெர்புர்க் என்னுமிடத்தில் உள்ள திரு.திருமதி. குமார் தர்சினி குடும்பத்தினரும்,
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் திரு.சுப்ரமணியம் அவர்களின் நினைவாக, சுவிஸ் பேர்ன் ரூபெனக்த் பகுதியில் வசிப்பவர்களான திரு.திருமதி கைலாசநாதன் (குழந்தை) வாசுகி கும்பத்தினரும்,
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் சின்னத்தம்பி, செல்லம்மா ஆகியோரின் நினைவாக, புங்குடுதீவு & வன்னியை சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச் பாடெனில் வசிப்பவர்களுமான திரு.திருமதி ஜெயக்குமார் (அப்பன்), சிவரஞ்சனி (தீபா) குடும்பத்தினரும் இணைந்து, வன்னிக்கு அனுப்பி வைக்கும் செலவை முழுமையாகப் பொறுப்பேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment