Tuesday, January 12, 2016

பாரதி சமூகத்தின் வரலாறு

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுககு; முன்னர், புங்குடுதீவு வீராமலை என்று அழைகக்ப்படும் கிராமம் எமது சமூதாயத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வாழ்ந்து வந்த இடமாகும்.  அக்கிராமம் பனை மரங்களும் தென்னை மரங்களும் நிறைந்து காணப்படும் சோலை வளமாகும்.  அங்கு எமது முன்னோர்களைச் சுற்றி வேளாளன் என்ற இனத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்தனர்.
அந்தக் கிராமத்திலே எமது முன்னோர்கள் ஒரு சிலர் கடலிலே வலை வீசி மீன் பிடித்து, அதை விற்றுத் தங்களுடைய குடும்பங்களின் வாழ்க்கையைக ; காப்பாற்றி வந்தார்கள்.  ஒரு சிலர் வேளாளர்களுக்குக் கூலித் தொழிலாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள்.   
ஒரு நாள் எமது சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வழமைபோல் நெல் வயல்களை உழுது, முடிவில் உழவு மாடுகளைக் கடல் ஆற்று நீரிலே கழுவுவதற்காகப் போனபொழுது, ஆழமான அந்தக ; கடலினிலே அழகான பேழையொன்று அலையோடு மோதிக ; கொண்டு அங்குமிங்குமாக 'ஆடி ஆடி' அசைந்து மிதந்து வந்து கடற்கரையில் அடைந்து விட்டது.  அதைப் பார்த்த அவர் மாடுகளைக ; கழுவாமல் கடற்கரையில் விட்டுவிட்டு ஓடிப்போய் முதலாளியிடம், நமது கடற்கரையில் ஒரு அழகான பேழையொன்று கரையொதுங்கியுள்ளது என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்ட முதலாளியும், இன்னொருவருமாக ஓடிச்சென்று மிதந்து வந்த பேழையை மூன்று பேருமாகத்
தூகக்pச் சென்று நாயன்மனார் என்றழைகக்ப்படும் கிராமதிலிலுள்ள பூவரசமரத்தின் கNPழ வைத்துத் திறந்தார்கள்.  பேழையைத் திறகக் முடியவில்லை.  மீண்டும் மீண்டும் திறந்தார்கள்.  பேழை திறபடவில்லை.  மேகம் இருளடைந்து விட்ட காரணத்தால் நாளைக ; காலை வந்து திறப்போம ; என்று கூறி வீடு சென்று விட்டார்கள்.  
முதலாளி உறங்கிக ; கொண்டிருந்த போது நள்ளிரவில் கனவில் வந்து காட்சியளித்து, ஐயா பெரியவரே நான் அடைந்து வந்த கடற்கரையின் அருகில் உள்ள அரசமரத்தடியின் கீழ் வைத்துப் பேழையைத் திறவுங்கள் என்று கூறியது.  ஆமாம் ஆமாம ;அப்படியே செய்கிறேன் என்று திடுகக்pட்டு எழுந்தார்.  உறங்காமல் கண்விழித்து விடியும் வரை காத்திருந்தார்.   அதிகாலை நேரம் ஆகும் போது சேவல் கூவியது,  குயில் கூவியது.  காகம் 'கா கா' என்று கரைந்தது.  சூரியன் உதயமாகியது கண்டு விறுவிறுப்புடன் விரைந்து சென்று தனக்குக் கனவில் காட்சியளித்த சம்பவத்தைக ;கூறினார்.  அதற்கு அவர்கள் சம்மதித்து மூவருமாகப் பேழையைக ;தூகக்pக ;கொண்டு அது கூறிய அரச மரத்தினடியின் கீழ்ப் பேழையை வைத்துத் திறந்தார்கள்.  உடனே பேழை திறகக்ப்பட்டது.  அந்தப் பேழைக்குள்ளே அழகான அம்மன் சிலை ஒன்று காட்சியளித்தது.  அவர்கள் மூவரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.  இதை அறிந்து மகக்ள் வெள்ளம் பெருகியது. மகக்ளின் உதவியுடன் கோயிலைக் கட்டி முடித்து விட்டு கண்ணகை அம்மன் எனப் பெயரிட்டார்கள். திருவிழாக்காலத்தைப் பத்து நாட்களாக்கினார்கள். 
மூன்றாம் திருவிழாவை எமது சமூதாயத்தைச் சேர்ந்த முன்னோர்களுக்கு வழங்கியிருந்தும், எமது திருவிழா நடைபெறும் காலங்களில் கோயில் உள்ளே
போய்ப் பூசை பார்ப்பதற்கு அனுமதியில்லை. கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கும் எமது சமூதாயத்திற்கு அனுமதியில்லை என்றார்கள்.  நாங்கள் வேளாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் கீழ்ச்சாதி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியதோடு எமது முன்னோர்களைத் தங்களுக்கு அடிமைக்
கைதிகளாக்கினார்கள்.  அத்தோடு சில நிபந்தனைகளை விதித்தார்கள்.   ஊர்களில் உள்ள கிணற்றில் நீங்கள் வாளி போட்டுத் தண்ணீர் அள்ளக ;கூடாது என்று தடை விதித்தார்கள்.  இதையெல்லாம ; ஏற்றுகn; காண்டு வாழ்ந்தார்கள்.  கூலி வேலைக்குப் போனால் சிரட்டையில் தண்ணீர் கொடுப்பார்கள். பனையோலைத் தட்டுவத்தில்தான் சாப்பாடு கொடுப்பார்கள்.  கைகட்டி தலை குனிந்து வாழ்ந்தார்கள்.  ஒரு சில காலங்களுககு; ப் பிறகு அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து குடி கொண்டிருந்த வீராமலைக ; கிராமத்தை தங்கள் கைவசப்படுத்தி தண்ணீர் இல்லாத வரண்ட பாலைவனத்தின் மத்தியில் அவர்களைக ;கொண்டு வந்து குடியமர்த்தினார்கள்.  இதற்கு எல்லா வழிகளிலும் துணை புரிந்தவர்கள் விதானைமார்களும், உடையார்களும் தான்.  
1990ஆம் ஆண்டுகளுககு;ப் பின்னரும் கொடூரம் நடகக்த் தொடங்கியுள்ளது. பாடசாலையிலும் எமது சமூதாயப் பிள்ளைகள் படிப்பதற்குத் தடையாக இருந்தது.  ஏனென்றால் தமது பிள்ளைகளை மட்டும் வாங்கிலில் இருத்துவார்கள்.  தமது பிள்ளைகளுக்கு மட்டும் படிப்பித்துக ; கொடுப்பார்கள்.  எமது சமூதாயப் பிள்ளைகளுக்கு படிப்பித்துக ; கொடுகக் மாட்டார்கள்.  இதனால் அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறினார்கள்.  படிப்புகள் இல்லாத சமூதாயமாக மாறியது.  வேளாளனுக்கு அடிமையாக வாழத் தொடங்கினார்கள்.  மிளகாய்த் தோட்டங்களுக்கும் புகையிலைத் தோட்டங்களுக்கும் சிறியோர்களிலிருந்து பெரியொர்கள் வரை கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள்.  அவர்கள் வெயில், மழை என்று பாராமல் உழைத்து வியர்வை சிந்திய இரத்தத்தால் வேளாளர் முன்னேற்றம் அடைந்தார்கள்.  தாங்கள் முன்னேற்றம் அடைய எமது சமூதாயத்தை அடிமைக் கைதிகளாகவே அடகக்pயாளத் தொடங்கினார்கள்.   எமது சமூதாயத்தில் ஒரு சில இளைஞர்கள் வேளாளனுடைய சூத்திரத்தை
அறிந்து கொண்டார்கள்.  இவர்களுடைய அடிமையில் இருந்து விலகினார்கள்.  அவர்களுடைய அடாவடித்தனத்தை அடியோடு அழிகக் வேண்டும் என்று பொங்கியெழும் சமூதாயமாக மாறினார்கள்.  பாரதியார் கொள்கையைப் பின்பற்றினார்கள்.  'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தலையங்கத்தை முன் வைத்தார்கள்.  1965 ஆம் ஆண்டு பாரதி சனசமூக நிலையத்தினைக் கட்டி முடித்தோம்.  11 பேர் கொண்ட நிர்வாகத்தினை உருவாக்கினோம.;  எமது சமூதாயத்தை நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்தோம.;  சில கோரிகi;ககளை முன் வைத்தோம.; சாதிமத பேதங்களின்றி சமத்துவமாக வாழ
வேண்டும் என்று குரல் கொடுத்தோம.;  சர்வமத சங்கம் எங்களுக்குக ; கை கொடுத்து இணைந்தது. துணிவோடு அழியாத முத்துகக் ளாக இணைந்தவர்கள் திரு.தளையசிங்கம் ஆசிரியர், திரு. வில்வரட்ணம், திரு. பொன்னம்பலம் ஆசிரியர், சட்டத்தரணி நேமிநாதன் சர்வமத சங்கத்தின் தலைவர் திரு. பாலசுப்பிரமணியம், தபால் அதிபர் திரு. தருமலிங்கம் ஆகிய இவர்கள் எங்கள் கரங்களுக்குப் பக்கபலமாக இருந்து கண்ணகை அம்மன் கோவில் உள்ளே போக வைத்தார்கள்.  சாமியைத் தூகக் வைத்தார்கள்.  கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள வைத்தார்கள்.  உள்ளூர்க் கிணற்றில் தண்ணீர் அள்ள வைத்தார்கள்.  விடிவைத் தேடித் தந்தவர்களை நாங்கள் மறகக்
முடியுமா?  அவர்களுடைய பாதையில் இருந்து நாங்கள் படிப்படியாக உயர்ந்து வருகின்றோம்.  எமது பாரதி சனசமூக நிலையம் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.  விளையாட்டு, கலை கலாச்சாரப்பிரிவு, மாதர் சங்கம், நாலொழுகக் வாலிப முன்னேற்றச் சங்கம் போன்ற நிர்வாக சபைகளை உருவாக்கியுள்ளோம்.  எமது கிராமத்தில் மது ஒழிப்புத் தடை செய்யப்பட்டள்ளது.
முகக் pயமான குறிப்பு 100 ஆண்டுகளுக்கு முன் கலட்டியம்பதி என்னும் கிராமத்தில் எமது சமூதாயத்தைச் சேர்ந்த பரியாரி சின்னட்டி என்பவர் பிரபல சிறந்த ஆயுள்வேத வைத்தியராகச் சேவையாற்றி,  கலட்டியம்பதியில் இவரால் பெத்தப்பா சிவன் ஆலயம் உருவாகக் ப்பட்டது.  இப்போது எமது சமூதாயம், அதனைப் பெரிய கோவிலாக உருவமைத்துப் பூஜைகளைக் கொண்டாடி வருகின்றோம்.  திருவெம்பாப் பூஜை, சரஸ்வதி பூஜை, சிராத்திரிப் பூஜைகள் நடைபெறகின்றன.  எமது கோயிலுக்கு நிரந்தரமாக ஒரு ஐயரை நியமித்து, அவர் கோவிலில் தங்கியிருந்து பூஜை செய்து வருகிறார்.  கோவிலில் நிர்வாக சபையும் அமைக்கப்பட்டு, எல்லா வளர்ச்சியையும் கண்டுள்ளது. எமது சமூதாயம் தனித்துவமாக வாழககூ; டிய சகத் p எங்களுக்கு உண்டு.  எமது சமூதாயம் படிப்பிலும் விளையாட்டிலும் முன்னேறி வருகின்றது.  ழுஃடுஇ யுஃடுஇ பல்கலைக்கழகம்
போவதற்கு ஏற்ற தகுதிகளுடன், படித்து ஒரு சில மாணவிகள் முன்னேறியுள்ளார்கள்.  எமது பாரதி முன்பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றார்கள். சிறார்களுக்கு சத்துணவுத் திட்டம் நடைபெறுகின்றது.  சர்வமத சங்கம் எமது சமூதாயத்திற்குப் பல வழிகளிலும் உதவி புரிந்து வருகின்றது.  எமது சமூதாயம் அடிமை விலங்கை உடைத்து அசையாத துணிவோடு தலை நிமிர்ந்து வருகின்றது.  இனிமேலும் யாருக்குமே அடிபணிய மாட்டோம்.  
எமக்குத் தேவையானது எம் சமூகத்தினர் கல்வியிலும் பொருளாதாரத்திலும்
தொழிற்றுறையிலும் முன்னேறுவதற்கு உரிய உங்களது அன்பான ஆதரவே.  
புங்குடுதீவின் மண்ணின் மைந்தர்களாகிய எம்மகக்ளுக்கு தயவு கூர்ந்து உதவி புரியுங்கள். வன்னியில் போரின்போது காயப்பட்ட எம் சமூக மகக்ள் பலர் புங்குடுதீவில் தாங்கொணாத கஸ்டத்தில் வாழ்கின்றார்கள். எமது சமூக மகக்ளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிகi; கயில் புலம்பெயர்ந்த எம் உறவுகளிடம் நாம ; பணிவுடன் கோருவது உங்களது ஆக்கபூர்வமான உதவிகளையே.  
உங்களில் பலரினது மகப்பேறின்போது எம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களே மருத்துவத் தாதிகளாகப் பணிபுரிந்திருக்கிறார்கள். உங்களது பெற்றோர்கள் பலருக்கு இது நன்கு தெரியும். உங்களது பெற்றோர்களின் வீடுகளில் நடககு;ம் பல்வேறு வகையான நிகழ்வுகளின்போதும் எமது சமூக மகக்ள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். 50-60 வருடங்களுக்கு முன் சின்னட்டிப் பரியாரியாரிடம் கோரோசனை, கஸ்தூரி வாங்கிச் சாப்பிடாதவர்கள் புங்குடுதீவு கிழகக் pல் இல்லையெனக் கூறலாம்.  இத்தகைய எமது சமூதாயத்தினைப் புலம்பெயர்ந்த இளம் சமூதாயத்தினர் அறியாமலிருகக் க ; கூடும்.  எனினும் உங்களது பெற்றோர்கள் எம்மை நன்கு அறிவர்.  அவர்களிடம் கேட்டு எம்மைப்பற்றி பலவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
தற்பொழுது நாங்கள் புங்குடுதீவு 11ஆம் 12ஆம ;வட்டாரங்களிலே அடர்ந்து வாழ்கின்றோம்.  எமது சமூதாயத்திற்குத் தயவு கூர்ந்து உதவி புரியுமாறு மீண்டும் பணிவுடன் கோருகின்றேன். 
செ. யேசுபாலன்  புங்குடுதீவு,
12ஆம ;வட்டாரம். 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP