Thursday, September 3, 2015

புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம் அமைப்பின் ஏற்பாட்டில், சுயதொழில் முயற்சிக்கு நிதி உதவி..!!

யாழ். புங்குடுதீவில் அமைந்துள்ள “தாயகம்” சமூகசேவை அகம் அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பிலுள்ள “மனிதநேயம்” என்னும் அமைப்பின் ஊடாக புங்குடுதீவைச் சேர்ந்த திருமதி. தயாவின்சன் நித்திரா அவர்களது குடும்பத்திற்கு
சுயதொழில் முயற்சி நிதியாக அறுபது (60) ஆயிரம் ரூபாய் இன்றையதினம் (10.08.2015) வழங்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள தாயகம் சமூகசேவை அகம் அமைப்பின் “சொக்கலிங்கம் அகடமி” என்னும் இலவச கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு பிள்ளைகளின் தாயாரான திருமதி தயாவின்சன் நித்திரா அவர்களிடமே இந்நிதி யாழ். இந்து கல்லூரியின் அதிபர் திரு. ஐ.தயானந்தராஜா அவர்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்கு முன்பு தொழில் செய்யும் போது பனையிலிருந்து கீழே விழுந்து அகால மரணமடைந்த அமரர் தயாவின்சன் அவர்களது குடும்ப நிலைமை அறிந்து “தாயகம் சமூக சேவையகம்” இது குறித்து கொழும்பிலுள்ள “மனிதநேயம்” அமைப்பிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலுள்ள “திரு. திருமதி கைலாயநாதன் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பின் கீழ்” மேற்படி புங்குடுதீவு தாயகம் அமைப்பின் ஏற்பாட்டில் இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிதி வழங்கி வைக்கும் நிகழ்வில் யாழ். இந்துக்கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா, மற்றும் புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தின் பிரதம போசகர் திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP