Thursday, September 3, 2015

திருமதி தவமணி செல்வரத்தினம் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி !!

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

புங்கை பெற்ற தாயே,  நீங்கள்  சீரும் சிறப்புடனும் வாழ்ந்து  ஏழு தெய்வ குழந்தைகளையும் பெற்றெடுத்து, எல்லோருக்கும் சிறப்புடன் கல்வியையும், நல் வாழ்வுதனையும் பெற்று கொடுத்து பேரப்பிள்ளைகளையும் பார்த்து சீராடிக்கொண்டிருக்கும்  போது,  சண்டை ஒன்று தொடக்கி ஊர் ரெண்டுபட்டு  எட்டு திசைகளாய் மாறி போய், உன்னோடு வாழ வேண்டிய வயதில் பிற நாடுகளில்  சென்றடைந்தோம் உன் குழந்தை செல்வங்கள் .
உனக்கு என்ன வருத்தமோ என்னவோ உன் ஆசை முகம் பார்க்க முடியாமல் தவித்தேன் ! தொலைபேசியில் ஒரு நிமிடமாவது உன் குரல் கேட்டால் தான் எனக்கு தூக்கமே உண்டு ! என்னை தோளிலும்,மார்பிளுமிட்டு தூங்க வைத்த உன்னை , என் கண் முன்னே வைத்து கவனிக்க முடியாமல் கண் கலங்கி நின்றேனம்மா !! ஒரு பெண் பிள்ளையுடன் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை ஆலயத்தில் முற்பகுதியில் கண்ணகை அம்மன் அருளுடன் வாழ்ந்து வந்து கொண்டிருக்கையில், அன்னை  அருளுடன் ஆறு பிள்ளைகளும்  சேர்ந்தன உன்னிடத்தில் !! ஒருவர் மாறி ஒருவராக பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாக உன்னை வந்து பார்த்து சென்றோம் .கடைசி மூச்சு ஊசலாடும் நிலை வந்ததும் , பிரான்சில் இருந்து ஓடோடி  பார்க்க வந்த என்னையும் என் குழந்தைகளையும்  பார்த்ததும் படுக்கையாய் கிடந்த நீ  துள்ளினாய், பதறினாய் கட்டி அனைத்து முத்தமிட்டாய் !! நன்றாகவே கதைத்தாய்!! காவிய தேசமாம்  எனது அம்மா நீ , நான் வந்திறங்கி  11ம் நாளில் மூச்சு தினறியதே!! உன் கனவுகள் நிறைவேறியதோ!! காலன் அவனுக்கு பொறுக்கவில்லையோ!!

உன் பிரிவை பார்த்து நல்லாவே அறிந்து கொண்டேன் காசு பணங்களை தேடியும் உயிரை கையில் வைத்து கொள்ள முடியவில்லையே என்று ! சொந்தமும் , நண்பர்களும் அருகில் இருந்தாலே போதும் சொர்க்கமென்று !!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல புங்குடுதீவு கண்ணகை அம்மனை வேண்டு நிக்கின்றோம் !

உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மகன் செல்வகுமார் குடும்பம் - பிரான்ஸ்
தொலைபேசி :+33661128300

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP