Monday, August 10, 2015

பிரான்ஸ் - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வித்தியா குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவி

 
கடந்த 17/05/2015 அன்று பிரான்ஸ் - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். அதில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தலைவர் வித்தியாவின் குடும்பத்திற்கு எமது ஒன்றியத்தின் சார்பில் அவர்களுக்கு ஓர் சிறு நிதியுதவியாக ரூபா ஒரு லட்சம் உதவுவதாக உறுதி அளித்திருந்தார்.
அத்துடன் அக்கண்டணக் கூட்டத்தில் பங்குபற்றிய தமிழக தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் அவர்கள் செல்வி வித்தியாவின் குடும்பத்திடம் தனது உதவியாக ரூபா ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்குமாறு கூறி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் கையளித்திருந்தார்.
மொத்தமாக இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபா 05/08/2015 அன்று வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக வேலனை பிரதேசசெயளாளர் முன்னிலையில் மாணவி வித்தியாவின் தாயாரிடம்வழங்கப்பட்டது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP