அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி !!
8ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்பு ஆற்றாய் ஊற்றெடுக்க ஆதரவாய் நீங்கள் இருந்து
இன்புற்று நாம் வாழ வழியமைத்து ஈதல் இதுவென புரியவைத்து....
உற்றார் எம்மை போற்ற ,ஊர் மெச்சும் பிள்ளைகளாய்
எப்போதும் எம் வாழ்வு அணையாத தீபமாக ,ஏற்றம் பெற ஏணியாய் வழிகாட்டி ...
ஐக்கியமாய் எமை ஒருங்கிணைத்து ஒருமனமாய் எமை நிலை நிறுத்தி....
ஓங்கி நாம் உயர்ந்து வாழ
ஒளடதமாய் அமைந்த எங்கள் அன்புத் தெய்வமே !!
உங்கள் ஆத்மசாந்தி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
குடும்பத்தினர்
0 comments:
Post a Comment