வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி!
மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்கள் மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டுள்ளார்.
இப் படுகொலை வழக்குக்கு தேவையான தடயங்கள் ஏதேனும் கண்டுபிடிப்பதற்காகவோ என்னமோ அவர் திடீரென அவ்விடத்திற்கு சென்றுள்ளதோடு வித்தியாவின் தாயாரையும் சகோதரனையும் சந்தித்தும் உரையாடியுள்ளார்.
சட்டத்தரணியோடு பா.உ. சி.சிறிதரன் உட்பட இன்னும் சிலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment