பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் மகாவித்தியாலய சுற்றுமதில் கையளிப்பு விழா!!
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட சுற்றுமதில் கையளிப்பு விழா
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதில் 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மிகவும் உணர்வுபூர்மாக பாடசாலைச் சமூகத்தினாலும் புங்குடுதீவு மக்களினாலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமாகாண ஆளுனரின் செயளாளருமான திரு இ இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் திரு G V இராதாகிருஸ்ணன், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு T ஜோன்குயின்ரஸ், வேலனைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு பொ சிவானந்தராசா, ஓய்வுநிலைப் போராசிரியர் திரு கா குகபாலன், ஆகியோரும், பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பாக அதன் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, திரு இராசலிங்கம் தமிழ்மாறன், ஓய்வுநிலை வர்த்தகர் திரு சுப்ரமணியம் கோபாலபிள்ளை அவர்களும்,
மற்றும் வடஇலங்கைச் சர்வோதய அறங்காவலர் செல்வி பொ ஜமுனாதேவி, ஓய்வுநிலை அதிபர் திரு ந தர்மபாலன், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி தனபாலன் சுலோசனா ஆகியோரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் விருந்தினர்கள் காலை 10 மணியளவில் பாண்டு வாத்தியம் வரவேற்பு நடனத்துடன் அழைத்து வரப்பட்டு சுற்றுமதிலின் பெயர்ப்பலகையினை திரு சுப்பையா சஸ்பாநிதி அவர்களும் திரு இ இளங்கோவன் அவர்களும் இனைந்து திரைநீக்கம் செய்து நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் கேற்றினைத் திறந்து எல்லோரினையும் வரவேற்றார்.
மேலும் இவ்விழாவில் மங்கல விளக்கேற்றலுடன் தேசியக்கொடி, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பனவும் மாணவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து ஆசியுரை, வரவேற்புரையினைத் தொடர்ந்து கராத்தே காட்சி, பெண்களின் உதைபந்தாட்டப்போட்டி புங்/மகாவித்தியாலய அணியினருக்கும் நாவாந்துறை மகாவித்தியாலய அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கபடிப்போட்டி புங்/மகாவித்தியாலய மாணவர்களுக்கும் அச்செழு சைவப்பிரகாசவித்தியாலத்திற்கும் இடையில் நடைபெற்றது.
தொடர்ந்து தலைமையுரையினை பாடசாலை அதிபர் திரு ச கணேஸ்வரன் அவர்கள் பேசும்போது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்களை நன்றியுடன் பாராட்டி தற்போது யாழ்/நகரப்பாடசாலைகளில் 400மீட்டர் சுற்றளவு கொண்ட மைதானம் அமைக்கக் கூடிய விளையாட்டு மைதானத்தினை பாதுகாப்புடன் கொண்ட பாடசாலைகள் வரிசையில் புங்குடுதீவ மகாவித்தியாலயம் 2வதாக உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரையுடன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பும் நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டு நன்றியுரை கொடியிறக்கலுடன். இந்நிகழ்வில் பங்கேற்ற எல்லோருக்கும் சிற்றூண்டி மதியஉணவு குளிர்பானம் வழங்கப்பட்டு இனிதே நிறைவேறியது.
விழாப்படங்களைப் பார்வையிட < இங்கே clic செய்யவும்
சுற்றுமதில் படங்களைப் பார்வையிட
0 comments:
Post a Comment