Monday, February 23, 2015

திருமதி.பத்மநாதன் பத்மராணி (30ம் ஆண்டு) - திரு.சிற்றம்பலம் பத்மநாதன்(10ம் ஆண்டு )ஆகியோரின் நினைவஞ்சலிகள் .

திருமதி.பத்மநாதன் பத்மராணி (30ம் ஆண்டு) - திரு.சிற்றம்பலம் பத்மநாதன்(10ம் ஆண்டு ) ஆகியோரின் நினைவஞ்சலிகள் .
புங்குடுதீவு 3ம் வட்டாரம்

ஆண்டுகள் ஓடிக்கரைந்தாலும் ,

அம்மா -

அழியாது உங்கள் நினைவு .

மீண்டும் வருவீர்கள் என்று காத்திருக்கின்றோம் ,

என்றும் உங்கள் நினைவுகளோடு .

நாங்கள் உங்களுடன் வாழ்ந்த காலங்களை விட

உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்த காலங்களே -

அதிகம் அம்மா .

கைப்பிடித்து நடக்கக் கற்றுத்தந்து விட்டு

கரைந்து போனீர்கள் .

இன்னும் தேடுகின்றோம்

அம்மா -எப்போது வருவீர்கள்

எங்கள்  குறை தீர்க்க..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எல்லையில்லாத அன்பு

கடுமையில்லாத கட்டுப்பாடு

அளவில்லாத சுதந்திரம் எல்லாம் கொடுத்து

அம்மா இல்லாத குறை எதுவும் இல்லாமல்

எங்களை வளர்த்து

எங்களைத்தவிர  உங்களுக்கு என்றொரு

உலகம் இல்லாமல் வாழ்ந்தீர்கள் அப்பா

எப்படி முடிந்தது உங்களால் தன்னந்தனியாக

எங்கள் அத்தனை பேரையும் ஆளாக்க .....

எங்களின் நண்பனாய்

என்றுமே ரசிகனாய்

அம்மா போனபின் அன்னையாய்

எல்லாமே நீங்கள் தானே .

ஆறுதல் தரும் உங்கள்

அழகிய புன்னகை எங்கே அப்பா ?

எறும்பு கூடத்தோற்கும் அப்பா

உங்களின் உழைப்பிற்கு முன்னால்

அழுது கரைகின்றோம் அப்பா

உங்கள் அன்பைத்தர யாருமில்லாமல் .

கடமையைச்செய்வது கடவுளுக்குச்சமன் என்பீர்கள் 

அப்பா-

நீங்கள் காட்டிய வழியில் நாங்கள் .

 

என்றும் உங்களின்

அன்போடும் ஆசீர்வாதங்களோடும்.....

 

தகவல்  : குடும்பத்தினர் .

 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP