புங்குடுதீவு மக்களும் கலந்து கொண்ட, சர்வதேச சிறுவர், முதியோர் தின விழா..!!
சர்வதேச சிறுவர், முதியோர் மற்றும் மாற்றாற்றால் உடையோர் தின விழா, கடந்த 17.11.14 அன்று வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திருமதி,ரூபிணி வரதலிங்கம் (யாழ். மாவட்டச் செயலாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம், வடமாகாணம்), திரு.ரி.ஜோன் குயின்ரன்ஸ் (வலயகக் கல்விப் பணிப்பாளர், தீவக வலயம், வேலணை), திரு.சி.சிவராசா (தவிசாளர், பிரதேச செயலகம், வேலணை), ஆகியோரும், கவுரவ விருந்தினர்களாக திரு.வி.எஸ்.சிவகுமாரன் (முகாமையாளர், இலங்கை வங்கி, வேலணை), திரு.ஈ.மகேந்திரன் (உதவி முகாமையாளர், கொமர்சியல் வங்கி, வேலணை) மற்றும் செல்வி.ஜமுனாதேவி (சர்வோதய அறங்காவலர்), திருமதி.சுலோசனா தனபாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வில், ஊர்பெரியவர்கள், பயனாளிகள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்ததுடன், புங்குடுதீவு ஜீ26 கிராம சேவகர் பிரிவு சிறுவர்கள் உட்பட, பலரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன், சிறுவர்கள், முதியோர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.
தகவல் & படங்கள்.. திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன்

0 comments:
Post a Comment