Thursday, January 16, 2014

புங்குடுதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம் - நுாற்றாண்டு விழா!‏

புங்குடுதீவு " ஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்" பாடசாலையின் நுாற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது மலரும் அன்று வெளியிடப்படுகிறது. அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் நுாற்றாண்டுவிழாக்குழுவினரும் பாடசாலைடி சமூகமும் கேட்டுக்கொண்டுள்ளனர். மாலை பாடகர் சாந்தனின் இசைக்கச்சேரியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நிறுவனரான வே.விசுவலிங்கம் அவர்களின் சிலை அவரது பேரனார் நமசிவாயம் பிரேமகுமார் அவர்களினால் நிறுவப்பட்டு கையளிக்கப்படுகிறது. அதேவேளை காணிகளை குணபாலசிங்கம் மற்றும் இராசேந்திரன் குடும்பத்தினர் வழங்கியிருக்கின்றனர். அதைவிட நிறைய பழையமாணவர்கள் நிறைய பண மற்றும் சரீர உதவிகளை வழங்கியிருக்கின்றனர். எல்லோருடைய ஒத்துழைப்புடனும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP