Tuesday, November 26, 2013

செல்வன் துரைசிங்கம் யோகேஸ்வரன் அவர்கள்



மண்ணில் : 9 செப்ரெம்பர் 1978     விண்ணில் : 31 ஒக்ரோபர் 2013
 
அமைச்சர் மகனே! ஆண் அழகனே! மீண்டும் வாராயோ!!


நீண்டவன் ! நிமிர்ந்தவன் ! நெஞ்சுரம் மிக்கவன்! காண்டற்கரிய கட்டுடல் கொண்டவன் ! பூண்ட நல் உறவுகளை கண்டிடும் போதெல்லாம்  புன்னகை பூத்து பொலிவுடன் பழகுபவன் !
 மாண்ட செய்தி கேட்டு மனமது உடைந்தோம் !மீண்டும் வருவானோ ? மென்முகம் காட்டுவானோ ? அப்பனே! ஐயனே ! உன் அடியினை தேடுகின்றோம் !
 நாட்டுபற்றாளன், நல்லதோர் அமைச்சர் !கூட்டு குடும்பத்தின் குலவிளக்கு !வீட்டையும், நாட்டையும் விழிப்புடன் நேசித்ததால்; விழுப்புண் அடைந்தவன் ! வெறும் தரையில் வெறியர்களின் காலில் மிதிபட்டவன் !
 ஊனமுற்ற உடலால் உயிரை பாதியில் விட்டவன்  - உன் தந்தை !
 தந்தை வழி மைந்தனாய் தாய் மண்ணை முத்தமிட்டாய் !
 சிந்தையிலே உருவெடுத்து கனடா தெருவெல்லாம் குரல் கொடுத்தாய்!
 கடும்குளிரும் பாராமல் ,கால் நோவும் பாராமல்
நெடுஞ்சாலை வீதியிலே நிமிர்ந்து நின்று போரிட்டாய்!மனம் சோராப் போராட்டம் ,மாமன்னன் கனடாவின் தலைவனையும் செவிசாய்க்க வைத்ததுவே ! என் வாழ்வில் உன் தந்தை ; இணைபிரியாப் போராளி ! அந்நிய படைகளின் கைகளில் அகப்படாமல் ;சென்னியில் மந்திரமாய் சிரசு எடுத்து , நயினைக்கடல் கடக்க , நான் பிறந்த மண் கடக்க , பண்ணை வீதி வந்து பாதை சரி பார்த்தவன் !கண்ணியமாய் யாழ் மண்ணில் கால் பதிக்க வழி செய்தவன் !
 ஏன் இன்றும் கனடா மண்ணில் , நிலம் நினைக்க ,களம் நினைக்க,உனை நினைக்க வழி செய்தான் வரிசையிலே அவனும் ஒருவன் !
 அப்பனே ! நீர் எம்மை விட்டு பிரிந்து ஒரு மாதம் ஓடி விட்டது !
 உன் நினைவே எம் நினைவு ! ஊர் சங்கக் கூட்டங்கள் ! ஊர் வலங்கள் எல்லாமும் உன் நினைவோடு நிலைத்திருக்கும் ! ஆத்மா சாந்திபெற அன்னை மகாமாரியையும் கன்னிகா பரமேஸ்வரியையும் வேண்டி நிற்கின்றோம்.

 உனது பிரிவால் துயருறும்
 c/o குணரத்தினம் குடும்பத்தினர் - கனடா

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP