யாழில் இருந்து வேலணைப்பாலம் ஊடாக பயணம் செய்வதில் சிரமம்!
புங்குடுதீவு வேலணைப் பாலம் கடந்த பல வருட காலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் இந்தப் பாலத்தினூடாகப் போக்குவரத்துச் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் வீதி அபிவிருத்தி என்ற பெயரில் உலக நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்கின்ற பல பில்லியன் ரூபா பணத்தை தென்னிலங்கையில் பெருந்தெருக்களை அமைப்பதற்கே பயன்படுத்தி வருகின்றது.
ஆனால், தமிழர் தாயகத்திலுள்ள பெரும்பாலான வீதிகள் இன்றுவரை புனரமைக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற போதிலும் எந்தவித நன்மையும் கிடைக்கவில்லையென்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி புங்குடுதீவு வேலணை வீதியூடாக தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்த மோசமாகச் சேதமடைந்துள்ளமையால் அந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக தினமும் இந்த வீதியூடாக பயணம் செய்கின்ற பேருந்துகளில் பல பேருந்துகள்; அடிக்கடி பழுதடையக்கூடிய நிலை ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பேருந்து செல்கின்ற போது இன்னொரு பேருந்து வந்தால் விலத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்தி என்ற பெயரில் மகிந்தவுக்கு கோடிக்கணக்கான ரூபா பணத்தை வாரியிறைக்கின்ற நாடுகளின் கவனத்திற்கு இந்த செய்தியை தீவக மக்கள் சமர்ப்பணம் செய்கின்றனர்.

0 comments:
Post a Comment