புங்குடுதீவில் வெடித்தது பசுமைப் புரட்சி – அணிதிரளும் மாணவர் திரட்சி!
கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன.
தொடர்ச்சியாக இப்பணியை முன்னெடுப்பதன் மூலம் வினைதிறன் மிக்க பொருளாதார வளம் ஒன்றினை உருவாக்கி எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டியது எமது கடமை என்றார் பன்னிரெண்டாம் ஆண்டு பயிலும் தனுஜன்.
எனினும் சில வருடங்களில் புங்குடுதீவை சுற்றியுள்ள கரையோர பிரதேசம் முழுமையும் பனம் கூடலாக ஆக்கப்படும். அதற்காக யுத்த சூழலால் செயல் இழந்து போன சூழகம் (சூழலியல் மேம்பாட்டு அமைவனம்) அமைப்பினை பாடசாலை மட்டத்தில் மீண்டும் உயிரூட்டி இயக்கி எமது இலக்கினை அடையும் செயல்பாட்டில் இறங்கியுள்ளோம். விரைவில் அனைத்து பாடசாலை மாணவர்களையும் சூழகம் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து பனை நடுகை மட்டும் இன்றி பயன் தரு மரங்களையும், நிழல் மரங்களையும் ஊர் முழுவதும் நடுகை செய்யவுள்ளோம் என்று சூழக செயற்பாட்டாளர்களான குகதாஸ், கவியரசன், மோகன், விஜய்ராகுலண் எனப் பலரும் தெரிவித்தனர்.
அது மட்டும் இன்றி , புங்குடுதீவு மகா வித்தியாலய பிரதேசம் பசும் சோலையாய் மாற்றம் பெற இருக்கிறது என்று மாணவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் விதைகளைக் கொண்டு மாபெரும் நாற்று மேடை ஓன்று பள்ளி வளாகத்தினுள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
2 comments:
authentic jordans
lebron 13
kobe 11
adidas nmd
lacoste outlet
adidas nmd
cheap jordans
michael kors outlet
longchamp le pliage
longchamp
www0416cheap jordans
coach outlet
new york jets jerseys
indianapolis colts jerseys
nike huarache
nike shoes
cheap ray bans
cheap oakley sunglasses
miami heat
air max 90
Post a Comment