Thursday, October 10, 2013

சோலையாக மாற்றமுறும் புங்குடுதீவு அமெரிக்கன் மிசன் பாடசாலை.

சுந்தர வேம்பு மரம் வரலாற்றில் முதல் முறை எமதூரில் அறிமுகம்.
ஒன்றரை நூற்றாண்டு பழமைமிகு பாடசாலையான புங்குடுதீவு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மீண்டும் புதுபொலிவு பெறுகின்றது. அதிபர் திருமதி யோகராணி விநாயகமூர்த்தி அவர்களின் அயராத நன் முயற்சியும் பெற்றோரின் பேராதரவும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றன. அந்த வகையில் அதன் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஆசிரியர் தின நன்நாளில் சூழகம் அமைப்பு அந்த பாடசாலை மாணவர்களுடன் நற்புறவுடன் கை கோர்த்தது. பள்ளி சூழலில் கனி மரங்களும் நிழல் மரங்களும் நடுகை செய்யப்படவுள்ளன. இன்றைய தினம் சுந்தரவேம்பு கன்றுகளும் கஜூ கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன. இன்னும் இருவாரங்களினுல் மா, ஜம்பு போன்ற கனி மரங்கள் நடுகை செய்யபடவுள்ளன.
 ## நாமும் பாராட்டுவோம் எங்கள் செல்வங்களை... நண்பர்களுடன் பகிருங்கள்.





 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP