Friday, October 19, 2012

மணல் போர்த்த வீதிகள் தோறும் நிழல் போர்க்கும் மரங்கள் நிறைந்திட வேண்டும்.

                                                        
                      ஓ மனிதா !  நிழலின்றித் தவிக்கின்றாயா ?
   பூமாதேவிக்கும் நிழல் தந்த மரங்கள் நின்ற வாழ்விடம் நீள் பாலை வெளியாகிப் போமா ?                                                                                                                                               
மேலே தரப்பட்ட தலைப்பும் இ கவிதை வரிகளும்  கவிஞர்                 சு .வில்வரெத்தினத்தின்  நூலிலிருந்து  எடுக்கப்பட்டவை . நமது தேசம் நிழல் தரு மரங்களில்லாது வெயில் போர்த்த வெளியாகிப்போச்சு. காலத்தின்  கோலத்தினால்  அனல் சுட்டெரிக்கின்றது . உடல் தீந்து காய்ந்து போகின்றது . கோடை காலத்தில் வியர்வை கொட்டுகிறது . துடைத்திட்டாலும் வியர்வை ஓய்வதில்லை . மனம் நிழலைத் தேடும் . மரத்தின் கீழ் நின்று இளைப்பாற மனம் ஏக்கமுறும் . நிழலோ எட்டிய  தூரத்தில் கிடைப்பதில்லை . வெயில் குளிப்பதை தவிர வேறு வழியில்லைமரங்கள் தளைத்திடாத இடங்களில் நிழலேது ? குளிர் தென்றல்  காற்றேது ?
            இனிய  சுகம் தரும்  தென்றல்  காற்று                                                                                                                                                                                                                                                                                    
சிந்தை ஒவ்வொன்றும் சிலிர்க்கச் செய்யும் அதன் பெயர்  தென்றல் காற்று. இது பாரதிதாசனாரின் பாடல் வரி . மரங்களில்லாத இடங்களில் நிழலும் கிடைக்காது . இளம் தென்றல் காற்று  வந்தெம்மை தழுவிச் செல்லவும் மாட்டாது.  ' நிழலின் அருமை வெயிலில் தெரியும் '  என்பது முதுமொழி . வெயில் சுட்டெரிக்கும் போது நினைவில் வரும் இம் முதுமொழி மழை
காலம் வந்ததும் நினைவில் நிற்காது மறந்து போய்விடும் . நிழல் தரும் மரங்களில் அல்லது கனி தரும் மரங்களில் சிலவற்றையேனும் நட்டு வளர்க்க மாட்டார்கள் நம்மவர்கள் . கடலிலிருந்து எழுந்து கானலுடன் கலந்து வரும் காற்று மரங்களைத்  தழுவி  உறவாடி குளிர்ந்து வரும் பொழுது தென்றலென்று மறுபெயர் பெறுகின்றது . வெப்பத்தினால் காய்ந்து கறுத்திருந்த மேனியும் குளிர் தென்றல் காற்று பட்டதும் மினுமினுப்படைகிறது .இந்த இன்ப சுகத்தை பெறுவதற்கு நம் தேசம் நிழல் தரும் மரங்களால் நிறைந்திடவேண்டும் .                                   
                       
                     மண் வளமடைய மழை வேண்டும்
மண் வளமடைய  மழை அவசியம் . மழை வீழ்ச்சியை  சீராக பெறவேண்டுமானால் மரங்கள் இ செடிகள்இ கொடிகளெல்லாம் தளைத்து நிறைந்திருக்க வேண்டும். மரங்கள் அடர்த்தியாக தழைத்திருக்கும் இடங்களிலே மழை இ முகில் படிந்து சீராக மழை பொழிவதைக் காணலாம். இன்றைய காலங்களில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் இடம்பெறும் வேலைகளிளைலேயே  நம் தேசம் மழையை பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. ஒரு சில நாட்களில் மழை கொட்டிவிட்டு போய்விடும் . நிலங்களுக்கு  வரப்புகளை சுற்றி வரக்  கட்டி மழை நீரை தேக்கவும் மாட்டோம் . தொட்டிகளையாவது கட்டி மழை நீரை தேக்கி வைக்கும் முறையை பேணவும் மாட்டோம் .1950 களுக்கு முன் மாரி காலம் ஆறு மாதம் வரை நீடித்தது . சித்திரைஇ ஆடி மாத காலங்களிலும் சிறந்த மழை பெய்யும் வழக்கமிருந்தது. தற்பொழுது இந்நிலை பொய்த்துவிட்டது . மாரி மழை காலம் இரண்டு மாத கால எல்லைகளுக்குள் குறுகிவிட்டது. காடுகள்இ மரங்கள் அழித்தொழிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும் .                                                                    
உண்ண உணவுமின்றி குடிநீரும் இல்லாது செத்துமடிகின்றன உயிரினங்கள் . பறவைகளும் இடம்பெயர்ந்தும் இ புலம்பெயர்ந்தும் போய்விட்டன . மரங்கள் தரும் இளைச்சருகுகளில்லாதும் இ மந்தைகள் தரும் எருப்பசளையுமில்லாதும்  மண் வளமற்றுப் போகின்றது . நாட்டின் வளம் அருகிச் செல்வதை உணர்ந்தவர்களாய் நாமில்லை . உணர்வுள்ள விவசாயிகளுக்கு உடலில் வலுவுமில்லை . அவர்களிடம் பொருளாதார வளமுமில்லை . மரங்களை வளர்த்து தேச வளத்தைப் பெருக்க வேண்டிய கடமை நல்ல மனவளம் உள்ளவர்களை நோக்கி காத்திருக்கின்றது.
வே .சு . கருணாகரன்                                                                                                                                                                                                                                                                               முன்னாள்  தலைவர் -  புங்குடுதீவு இ நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம்                                                                                                   

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP