புங்குடுதீவு ஸ்ரீசித்திவிநாயகர் மகாவித்தியாலய நூற்றாண்டு விழா தொடர்பான கூட்டம்.
மேற்படி கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி (16.09.2012) ஞாயிற்றுக்கிழமை காலை ரொறன்ரோ எக்லின்டன் வீதியிலுள்ள ஈஸ்ட்ரவுண் விழா மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பெருந்தொகையான ஆதரவாளர்களும் பழைய மாணவர்களும் சமூகமளித்திருந்ததோடு, பல ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்னேற்றப்பணிகள் பற்றிய தமது கண்ணோட்டத்தையும் மிக உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு நிறைவாகும் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை ஏனைய நாடுகளிலுள்ள குழுவினருடன் சேர்ந்து மேற்கொள்ள ஒரு விழாக்குழுவும், விழா மலர் ஒன்றினை வெளியிடுவதற்காக ஆக்கங்களைச் சேகரிக்கும் பணியில் செயற்பட ஒரு மலர்க்குழுவும் இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டன.
கனடாவில், பல்வேறு நகரங்களிலும் வசிக்கும் பழையமாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தங்களது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று ஆர்வமாக அழைக்கின்றோம்.
விழா மற்றும் மலர்ப்பணிகளில் தொடர்புகளுக்கு:
தம்பிப்பிள்ளை இரத்தினராசா 905 472 1735
இளையதம்பி விஜயகுமாரன் 416 575 8073
குமார. மனோகரன் 647 808 5812
மகேஸ்வரி இராமச்சந்திரன் 416 754 1393
சிவசாமி திருவருட்செல்வன் (ராசன்) 416 670 2136
0 comments:
Post a Comment