சோம சச்சிதானந்தன் அவர்களின் பிறந்ததினத்தின் போது வாழ்த்தி வழங்கிய பாராட்டுப் பாமாலை!!
காண்பதற்கோ இன்பம் தருமன்பன்
நண்ணும் நண்பர்க்கோ நலமெலாந் தந்திடுவான்
நம்பிக்கை தரவுழைக்கும் நல்லோன்
எண்ணும் இறைவனுக்கு ஏற்புடையான்
எண்ணில் எழுதவியலாப் பணியாளன்
மண்ணும் மங்காதொளிர மனந்தளரா நேயத்தான்
மன்னும் சச்சிதானந்தமே வாழ்க நீடு!
பங்கமிலாப் பான்மையிலே பலபணிகள் ஆற்றிடுவான்
பங்குக்குப் பணியிலே பதிந்து இருப்பான்
சங்கம் வளர்த்திடவே தலையாலே தானுழைப்பான்
எங்கும் எமையெல்லாம் இரந்தும் பணிமுடிப்பான்
தங்கக் குணத்தாலே தன்னிடமே கவர்ந்திடுவான்
தாங்கி நோயாளர் நோய்தீரப் போற்றிடுவான்
இங்கிதமாய்க் இகபரப் பேறுகொள்ள வணங்கிநிற்பான்
மாண்பு மனச் சச்சிதானந்தமே வாழ்க நீடு!
அமுதம் அவன்மொழியில் அப்பன் அருளாளன்
அமுதம் பருகிடவே அன்பினிலே வேண்டிடுவான்
சமூகம் சிறந்திடவே சலிப்பின்றி உழைத்திடுவான்
அருமைமிகு அன்பன் அனைவர்க்கும் உறவாவான்
சமூகம்புகழ் சச்சியென சந்தமுடன் இயைந்திடுவான்
சங்கையிலாப் பணியாளன் சன்மானம் இல்லாதான்
தன்வதனச் சிரிப்பாலே தன்வயப் படவைப்பான்
தன்வினை தகைகொள் சச்சியே வாழ்க நீடு!
அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும்
அப்படிப் பாடியவை உளமுருகப் பாடிடுவான்
எப்பெரு விழாவெனினும் எங்கும் இயைந்திடுவான்
முனைப்புடன் முயன்றிடவே முன் நிற்பான்
செப்பவரும் சேதியெலாம் தந்திடுவான் தயவுடனே
செம்மை உளத்துடனே சிரிப்பு மலர்முகத்தான்
தப்பாது தம்மவர்க்கு தன்னுள்ளம் தந்திடுவான்
இப்புவியில் இப்புடனே வாழ்ந்திடவே வாழ்த்து!
22-09-2012ல் பிறந்ததினம் வருவதையிட்டு கனடா த.சிவபாலு (முன்னாள் அதிபர்) அவர்களினால் வாழ்த்தி வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment