Sunday, July 22, 2012

பெருங்காடு முத்துமாரியம்மன் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

புங்குடுதீவின் மேற்கினிலே! மூன்றாம் வட்டாரம்
பெருங்காட்டினிலே! எங்கள் பெருந்தாய் வீற்றிருப்பாள்!
அருள் பூத்திருப்பாள்! வரும் இடர்கள் யாவும்
களைந்திடுவாள்! மாரியம்மாள் என்றும் தனம் தருவாள்!


தாமரை பூத்த தடாகமுண்டு நெல் மணி விளையும்
வயல்களுண்டு பனை மரங்கள் எழுந்து நிற்கும்!
தென்னைகள் விளைந்து செழித்திருக்கும்! ஆலமரம்
ஒன்று குடை பிடிக்க அன்னை அமர்ந்திருப்பாள்!
அருள் பொழிவாள்! கருணை நிழல் தருவாள்!

மழை தரும் தெய்வம் எங்கள் மாரியம்மன் - புங்கை நிலம்
விளை பயிர்கள் காத்திடுவாள்! எங்கள் இனம் சூழ்ந்த
தளை அகற்றி, சிங்காசனம் மீதேறி வரும் இடர்
களைந்து சுகம் தருவாள்! விடுதலை அளிப்பாள்!

ஆண்டாண்டு தோறும் வரும் ஆடியிலே புதுக்கோலம்
பூண்டன்னை புவியினிற்கு அற்புதம் அளிப்பாள்!
அரக்கரை அழிப்பாள்! வேண்டும் பக்தர்கள் குறை நீக்கி
வரமளிப்பாள்! வலமாயிருப்பாள்! மாரியின் கண்ணிரண்டும்
அசைந்திட்டால், அகிலம் செழிக்கும்! அற்புதம் நடக்கும்!

நான்கு வேளை பூசைகள் கண்டு பாங்குடனே
அருள் தருவாள்! வானுயர்ந்த கோபுரம் கண்டவள்!
வடம் பிடித்திழுக்கத் தேர் மேலிருப்பவள்! ஆலயம்
தேடித்தான் மக்கள் செல்வது வழக்கம்
ஆண்டிலொருமுறை இரதமேறி அயல்
சூழ்ந்த மக்களைத்தேடி அன்னை
பவனி வருவது பழக்கம்!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP