திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி
தம்பிமுத்து வாத்தியார் (புங்குடுதீவு - 3)
ஆனித் திங்கள் இருபதாம் நாள் இன்று ஆண்டோ ஐந்தாகி விட்டது, உங்கள் நினைவோ நிழல் ஆகிவிட்டது. தாயாகி எம்மைத் தாலாட்டினீர்கள்!
தந்தையாய் இருந்து உருவாக்கினீர்கள், குருவாய் இருந்து உபதேசித்தீர்கள், கூட்டாக இருந்து வாழ்ந்து காட்டினீர்கள், சேயாய் இருந்து, நாங்கள் உங்கள் பாதவடிகளைத் தேடுகின்றோம்.
இல்லற வாழ்க்கையில் இருள் சூழ்ந்த போதும் இதயத்தைக் கல்லாக்கி, வாழ்வை ஒளியாக்கி, மக்களுக்காய் மனங் கலங்காது வாழ்வளித்தீர்களே!
உரத்த குரலோசையை செவிகளிலே தேடுகின்றோம், கம்பீர நடையை எம் மண்ணிலே தேடுகின்றோம், வாழ்ந்த வாழ்க்கை முறையை எண்ணுகின்றோம், எண்ணில் அடங்கவில்லை!
ஆடி அடங்கும் வாழ்க்கையென அமைதி கொண்டோம், ஆனாலும் எம் மனம் குமுறுகின்றது, ஆறுகின்றோம், தேறுகின்றோம் அனுதினமும் அன்னை மகாமாரியை ஆத்ம சாந்திக்காய் பிரத்திகின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல் குடும்பத்தினர்
தகவல் குடும்பத்தினர்
0 comments:
Post a Comment