எங்கள் பெரிய தந்தையை எங்கு தேடுவம்? - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி
எங்கள் பெரிய தந்தையை எங்கு தேடுவம்?
எங்கள் தந்தையோடு உடன் பிறந்தார் ; எங்கள்
பெரிய தந்தை 15.07.07 இல் இறந்தார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்தவர்
வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்து பின் இறந்தவர்!
நீத்தார் பெருமை கூற இப்பிரபஞ்சத்துள்
உனை எங்கு தேடுவம்?
எங்கள் ஊரின் சுற்று வட்டாரத்துக்கே ஒரு பெரியவர்
இப்பெரியவர் எங்கள் ஊருக்கே என்றும் உரியவர்!
இனியவர் ஊர் மக்களுக்கு எப்போதும் இனியவர்
சுப்பிரமணியம் எனும் நற்பெயர் கொண்டவரே!
நீத்தார் பெருமை கூற இப்பிரபஞ்சத்துள்
உனை எங்கு தேடுவம்?
தம்பிமுத்து ஆசிரியர் முன் நின்றால் நம்பி
ஒரு காரியத்தைச் செய்து முடிக்கலாம்!
சபை முன்னே அவர் நடந்து வந்தால் அவர்
முன்னே சனம் எழுந்து கனம் பண்ணும்!
நல்லாசிரியரே! இப்பிரபஞ்சத்தில் எப்பள்ளியில்
வந்து உனைத் தேடுவம்?
ஊரவர் மனங்களில் நீ மலையானவன்
பிள்ளைகள் உளங்களில் தலையானவன்!
உறவூகள் உளங்களில் என்றும் நிறைந்திருப்பவன்
ஊரோடு ஒன்றி ஒன்றாய் நிறைந்திருப்பவன்!
நமதுhரின் நடுவில் நீ சிலையானவன்
இப்பிரபஞ்சத்துள் எமதுயிரின் உயிரை எங்கு தேடுவம்?
நீ நடந்த சுவடுகள் எம் முற்றத்திலே
நீ காட்டிய நல்வழி நம் உள்ளத்திலே!
நீ விளைத்த விளை நிலம் தென் புலத்திலே
என்றும் அழியாமல் வாழும் எம் நினைவிலே!
நினைவில் நிறைந்தவரே! இப்பிரபஞ்சத்தில்
உனை எங்கு தேடுவம்?
சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.
0 comments:
Post a Comment