Monday, May 7, 2012

பூவரசம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் புங்குடுதீவில் மீட்பு!

யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரப் பகுதியில் பூவரசு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரது சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புங்குடுதீவு, 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த வேலாயுதம் சிவபாலன் (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கே.மகேந்திராஜா, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக ஊர்கவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


   

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP