Monday, May 7, 2012

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா நடத்திய முதல் ஆண்டு “பூ வரசம் விருந்து – 2012-புதுவை இராமன்.

இயற்கை அழகும் அனைத்து வளமும் பூத்துக் குலுங்கும் கனடா நாடு உலகளவில் மிகச் சிறந்த நாடாகக் கருதப்பட்டுள்ளதோடு, தாயகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட தமிழனப்படுகொலையின் காரணமாக
கடந்த 40 – 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தாயகத் தமிழர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சோந்தவர்களாவார்கள். இந்நாட்டின் தட்ப வெட்ப நிலையும், பருவ காலங்களின் மாற்றங்களும் விந்தையாக அமைந்துள்ளதோடு, இங்குள்ள தமிழர்களைப் பொறுத்த வரை, பனிப்பொழிவும், இலையுதிர்காலமும் மாறி, வசந்தம் வீசிட கோடை காலம் தொடங்கிவிட்டாலே போதும், இங்குள்ள பல்வேறு தமிழ் சமூக, கலை, இலக்கிய கலாச்சார மற்றும் ஆன்மீக அமைப்புகள் யாவும் தங்கள் தங்கள் சமூகம் சார்ந்த எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் மகிழச்சிக் கடலில் மூழ்கடித்து விடுவார்கள். அதுவும் அனைத்து சமூகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய விருந்தோம்பல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்;களப்படுத்தி விடுவார்கள். அந்த வகையில் தாயகத்தில் தங்களது அறிவுக் கண்களைத் திறந்த ஆசிரியர்களயும், கல்வி கற்ற நிறுவனங்களையும் நன்றியுணர்வுடன் நினைவுகூறும் வகையிலும், தாங்கள் கல்வி கற்ற பாடசாலை, கல்லூரி போன்றவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்காக வருடந்தோறும் தாங்கள் உருவாக்கியுள்ள பழைய மாணவர் சங்கத்தின் மூலம் விழா எடுத்து பெருமைப் படுத்தி வருவதை நாம் யாவரும் நன்கு அறிவோம். அதிலும் நமக்கு எல்லாம் நன்கு அறிமுகமான புங்குடுதிவு பழைய மாணவர் சங்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் உன்னதமாக தொடர்ந்து நடத்தி வரும் “ப+வரசம் பொழுது” கலை மாலை பற்றி விமர்சிக்கவே வேண்டாம். அந்த அளவிற்கு புங்குடுதீவ மக்கள் யாவரும் இணைந்து மிகவும் வெற்றிகரமாகவும் வஜிமரிசையாகவும் இக்கலையிரவை நடத்தி பெருமையடைகின்றனர். அதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதத்தில் இந்த ஆண்டு முதன் முதலாக ‘ப+வரசம் விருந்து’ எனும் இராப்போசன விருந்துடன் உரையரங்கம், இங்குள்ள பிரபல மெல்லிசைக் குழுவான ‘ ளரிநசளழளெ’ இயக்குனர் திரு பயாஸ் ஜவாஹீர் அவர்களின் பின்னணி வாத்யக் கலைஞர்கள், பிரபல மெல்லிசைப் பாடகர்கள், பாடகிகளின் இனிய திரையிசை கானங்கள் மற்றும் Pசiஅய னுயnஉந வுசழரிந னுயnஉநசள திரைப்படபாடல் நடனம், பொப்பிசை என கடந்த 7.4.12 அன்று மாலை 5183.ளூநிpயசன யுஎநரெந ஊhiநௌந ஊரடவரசயட ஊநவெசந விருந்து மண்டபத்தில் மிகவும் இனிமையாக நடத்தி வருகை புரிந்திருந்த அனைத்துப் பார்வையாளர்களையும் அகமகிழ வைத்து விட்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராய் திரு யோகநாதன் அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார். மேலும் பிரபல திபை;படத்தயாரிப்பாளரும், முன்னாள் சங்கத் தலைவருமாகிய திரு எஸ.எம்.தனபால், திரு சோம சச்திhனந்தம், திரு சிவநேசத் திருச்செல்வம், பிரபல மூத்த கலை இலக்கியவாதி புலவர் திரு ஈழத்து சிவானந்தன் போன்றோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

ஆனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியும், விழாப் பிரமுகர்கள், அணுசணையாளர்கள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரையும் முறையே அறிமுகப்படுத்திச் சிறப்பித்த திரு ஆர்.ஆர். பிரபா அவர்களின் பங்களிப்பு அனைவரின் பாராட்டுதல்களைப் பெற வைத்தது. இச்சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்று பங்களிப்பு செய்து வரும் நிர்வாக சபை உறுப்பினர்கள், மற்றும் முக்கிய வர்த்தக வியாபாரப் பிரமுகர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.

வழைமைபோல் தமிழ்த்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம் மற்றும் மௌன அஞசலியைத் தொடர்ந்து, திரு சோம சச்சிதானந்தம், புங்குடுதிவின் பெருமையைப் புலப்படுத்தும் பாடலாக ‘புங்குடுதீவின் தாய் அவள்….உனைப் போற்றி வணங்குகிறேன்’ என்ற எழுச்சிமிகுப் பாடலை தனது கம்பீரகுரலில் பாடி மகிழ்வித்தார்.

இச்சங்கத்தின் தலைவர் திரு கருணாகரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சூப்பர்சன்ஸ் மெல்லிசை நிகழ்ச்சி தொடங்கியது. முதல் பாடலை பிரபல மெல்லிசைப் பாடகியான செல்வி நந்தீதா அவர்களின் இனிய குரலிசையிhக ராவணன் திரைப்படப்பாடலான ;கள்வரே..கள்வரே’ என்ற பாடலைப் பாடி அசத்தி விட்டார். இக்குழவில் பங்கேற்ற கலைஞர்களான ராகவன முருகேஷ்;, உமா நந்தினி, சிந்து இந்திரசித்துயுடீளு வாகன விபத்து காப்புறுதி நிறுவன அதிபரும் பிரபல பாடகருமான சிங்கராஜ், செந்தூரன், நந்திதாஸ், லெவன்றா அந்தோணிப்பிள்ளை, சிந்து இந்திரஜித, ;.நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு பிரபா ஆகியோர் பின்னணிப் பாடகர்களாகவும், சூப்பர்சன்ஸ் இசைக்குழு வாத்யக்க லைஞர்களாக பயாஸ் ஜவாஹிர் (கீ போர்ட்.), செந்தூரன் அழகையன், அனாஸ் ஜவாஹிர் (ஆக்ரோபாட்) கீர்தன திவ்யராஜன் (டிரம்ஸ்), ரவி செல்லையா (தபேலா) ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பாடப்பட்ட புதிய மற்றும் பழைய திரைப்படப் பாடல்களும், Pசiஅய னுயnஉந வுசழரிந னுயnஉநசள கிருத்திகா தயாபரன், தாரணி தயாபரன், நிஷானா ரஞ்சித்குமார் மற்றும் அனு இலங்கேஸ்வரன் ஆகியோரின் நடனமும் அனைவரையும் பரவசப்படுத்தி இன்புற வைத்தது. அதுபோன்றே வாழ்த்துரை மற்றும் பாராட்டுரை வழங்கி உரையாற்றிச் சிறப்பித்த அனைவருமே புங்குடுதீவின் பெருமைகளையும், தாங்கள் வாழ்ந்து அனுபவித்த பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, அந்நாள்போல் இனி வருமா என்ற சிந்தனையைத் தந்து தங்களது பிறந்த மண்ணை நேசித்து தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது உண்மையிலேயே அனைவரின் மனதை நெகிழ வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்று வெளியிட இருந்த புங்குடுதீவு மான்மியம் எனும் வரலாற்று நூல் தவிர்க்க முடியாத காரணத்தால் அன்று இடம் பெறவில்லை எனினும் இந்நூல் வெளியீட்டு விழா வரும் 22.4.12 அன்று கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மணடபத்தில் நடைபெற உள்ளது.
இனிய சிற்றுண்டி, குளிர் பானங்கள் மற்றும் இரவு ராப்போசன விருந்து வழங்கிய சுழலயட ஊhநக ஊயவநசiபெ ( கழசஅநச டீயடியடியயள ஊயவநசiபெ) பங்களிப்பு அனைத்தும் பிரமாதம் எனலாம்.

இசையும், நடனமும், விருந்தும் என கொண்டாடி மகிழ்ந்த இந்த ஆண்டு புங்குடுதீவு ப+வரசம் விருந்து உண்மையிலேயே புங்குடுதீவில் இருந்த உணர்வையே ஏற்படுத்தும் வகையில் வெண் திரையில் புங்குடுதீவின் வரலாற்றுப் புகைப்படங்கள் காட்சியிளிக்க வருகை புரிந்து சிறப்பித்த அனைத்து உறவுகளையும் மலரும் நினைவலைகளாக தாயகத்தை நினைவில் கொண்டு வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இறுதியாக செயளர் திரு சிவா அவர்களின் நன்றியுரையுடன் முதல் ஆண்டு பூவரசம் விருந்து இனிதே நிறைவுற்றது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP