Monday, April 9, 2012

திரு அம்பலவாணர் இராஜரட்ணம் (பொரளை முன்னாள் பிரபல வர்த்தகர் ''ரஞ்சினி ஸ்டோர்ஸ்'')

அன்னை மடியில் : 13 ஏப்ரல் 1927 — இறைவன் அடியில் : 7 ஏப்ரல் 2012
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், யாழ்.கந்தர்மடம், அம்மன் வீதி இல-16, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராஜரட்ணம் அவர்கள் 07-04-2012 சனிக்கிழமை அன்று இறைவன் அடிசேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயலட்சுமி(பாக்கியம்-யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சாந்தலிங்கம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, மகேஸ்வரி, வருணமணி, கனகசபை, தையல்நாயகி, தவமணிதேவி, மற்றும் கமலா(பிரான்ஸ்), செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(ஆசிரியர்), திருஞானம் ஆகியோரின் சகலனும்,

இராஜரஞ்சினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற இராஜரஞ்சன், இராஜேஸ்வரன்(சுவிஸ்), இராஜ்குமார்(கனடா), இராஜரமணி(நோர்வே), இராஜபிரதீபன்(பாபு-கனடா), இராஜசுரேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நம்பியாரூரன், கிருஷ்ணகலா, செல்வேந்திரன், விநோதினி, சந்திரகலா ஆகியோரின் அருமை மாமனாரும்,

செந்தூரன், மயூரன், அட்சரா, அட்சரன், வினுஜன், நிருஜன், ரஸ்மி, பிரகவி, பிரதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-4-2012 புதன்கிழமை அன்று பி.ப. 5:00 மணிமுதல் 9:00 மணிவரையும், 12-04-2012 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 11:30 மணிவரையும் இலக்கம் 4164 Sheppard Avenue East ல் அமைந்துள்ள OGDEN Funeral Homeல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாபு, ராஜ்குமார் — கனடா
தொலைபேசி: +14166093050
ரஞ்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940245864
ராஜேஷ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434778622
ராஜி — நோர்வே
தொலைபேசி: +4721686009
சுரேன் — ஜெர்மனி
தொலைபேசி: +498945237540
பாக்கியம் — இலங்கை
தொலைபேசி: +94212270474


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP