Sunday, March 4, 2012

ஒலிபரப்பாளர் தம்பிஐயா தேவதாஸின் நூல் வெளியீடு இன்று.

ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய ‘புங்குடுதீவு வாழ் வும் வளமும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று ஞாயிறு (04) மாலை 4.00 மணிக்கு கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி வீரமைலன் கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.

மனவளக்கலைப் பேராசிரியர் அருள்நிதி சி. முருகானந்தவேல் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோ விசேட அதிதியாக கலந்து கொள்கிறார். நூலின் முதற் பிரதியை பிரபல தொழில் அதிபர் லயன் செ. மகேந்திரனும் விசேட பிரதியை சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் சே. சுந்தரலிங்கமும் பெற்றுக் கொள்வார்கள்.
சட்ட அறிஞர்கள் வி.ரீ. தமிழ்மாறன், கே.வி. தவராசா, கல்வியாளர்கள் க. நாகேஸ்வரன், என். சுந்தரம்பிள்ளை, கலைஞர் அம்புறோஸ் பீட்டர், எழுத்தாளர் மு. பொன்னம்பலம், எம். இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக கலாஷேத்திர மாணவியான செல்வி டொசிட்டா பீட்டர் வழங்கும் பரதநாட்டியம் இடம்பெறும்.
புங்குடுதீவு பற்றிய இல்வரலாற்று நூலில் புங்குடுதீவின் முக்கிய இடங்கள், கோயில்கள், பாடசாலைகள், பெரியோர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், வர்த்தகர்கள் என்று பலரின் அறிமுகங்களும் இடம் பெறுகின்றன. முக்கியமான இடங்கள், கோயில்களின் வண்ணப் படங்களும் இடம்பெறுகின்றன.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP