Wednesday, March 7, 2012

குறிகாட்டுவான் பகுதியில் வைத்து நெடுந்தீவு இளைஞன் மீது பௌத்த பிக்கு தாக்குதல் .

புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில், பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த நெடுந்தீவைச் சேர்ந்த 19வயது இளைஞர் மீது பௌத்த பிக்கு (நயினாதீவு விகராதிபதி) ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.
நேற்று மாலை 3மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த யோ.லோரன்ஸ் (வயது19) என்ற இளைஞர், நெடுந்தீவு சமாசத்திற்குச் சொந்தமான படகில் பொருட்களை எற்றிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், நயினாதீவிலிருந்து குறித்த பிக்குவை ஏற்றிச் செல்வதற்காக வந்த படகு, துறையில் அணைக்கப்படுவதற்கு இடமில்லாமல் போனமையினால், நெடுந்தீவு படகை யார் அதிக நேரம் துறையில் நிற்க அனுமதித்தது என கடற்படையினருடன் பிக்கு முரண்பட்டுள்ளார்.
பின்னர் நெடுந்தீவு படகிற்கருகில் சென்ற பிக்கு அங்கு பொருட்களைச் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞரை காலால் உதைத்து கீழே தள்ளியதுடன் கடும் வார்த்தைகளால் பேசி துரத்தித் துரத்தி அடித்துள்ளார்.
இதனால் குறித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இவை அனைத்தையும் அங்கு நின்ற தென்னிலங்கை சுற்றுலாப் பிரயாணிகளும்,ä கடற்படையினரும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பிக்கு கடற்படையினரை பார்த்து நெடுந்தீவுப் படகு 10 நிமிடங்களுக்கு மேல் குறிகட்டுவான் துறையில் நிற்கக்கூடாது என கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனால் எதிர்வரும் நாட்களில் பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP