Tuesday, February 7, 2012

தாயன்பு - அரியரத்தினம் .

அம்மா!

என்னை என்ன எண்ணி பேதித்தாய்
முந்தித் தவம் இருந்த முன்னூறுநாட் சுமந்து அந்தி
பலகலாய் சிவனை அனு நினைந்து



என்னையெ பெற்றெடுத்தாய் பெற்றாயே தாயே
பேதமையைத் தான் தகர்க்க
எத்திக்கும் இவன் பாடும் கவி போதும் என்று
அற்றை நாள் நினைந்தாயோ அதனால் இவன் வாழ்வு
கவிதையிலும், கதையினிலும்
கானலிலும் ஞானத்திலும்
கடந்து வந்த பாதைகள் தான் எத்தனை எத்தனையோ

என்னை நீ சுமக்கையிலே என்ன நினைத்தனையோ

நாளையிவன் தாய்மொழியில் அன்னைத் தமிழ் மொழியில்
என்னவெல்லாம் செய்திடுவான் என்று நினைத்தாயோ

தாயே நின் பாலுடனே தமிழறிவும் சேர்த்து ஊட்டி
தாயன்பைப் போலவே - அன்னைத் தமிழ் மீதும்
அன்பு வைக்க வேண்டுமென
சொல்லிக் கொடுத்தனையா

சோறோடு ஊட்டினையா
என்ன சொல்வேன் அம்மா உயிர் தந்த என் தாயே
காலைக் கரக்கலிலே காகம் என் மேல் பறந்திடுமோ
இல்லை மாலையது வந்தால்
மாகக் குரவிதான் பார்த்திடுமோ
என்றெல்லாம் எண்ணி எண்ணி
எனஅனை அடை காத்தவளே!
வட்டிலிலும் தொட்டில-pலும் மார் மேலும் தோள் மேலும்
கட்டி அணைத்தென்னை
காதலித்த என் அம்மா
இன்று இந்த கட்டிடங்கள்
கனதியான காட்டிடையே
உன்னை நினைந்த ஒரு கவி சமைக்க வந்தேன்
என் உள்ளே புகுந்த
என்க் கருள் தருவித்து
உன் மகனை நீ ஒரு நாள்
கண்டதொரு கனவது போல் வந்திடுவான்
காத்தருவாய் என் அம்மா.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP