தீவகத்தில் பதியப்படுகின்றது பட்டதாரிகள் விபரம்!
மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பகுதிகளில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் விவரம் தொகுக்கப்படவுள்ளது.
மூன்று வருட, நான்கு வருட காலக் கற்றையைக் கொண்ட பட்டங்கள் மற்றும் டிப்ளோமா பட்டம் பெற்ற பட்டதாரிகள் தமது விவரங்களுடன் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வேலணை பிரதேச சபைக்குத் தவறாது சமுகமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச சபை இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. வேலணை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் நாளை தவறாது சமுகம் தரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் பட்டதாரிகள் விவரம் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிற்கும், தேசிய வரவு-செலவுத் திட்டப் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகச் சபைத் தவிசாளர் சி.சிவராசா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment