Monday, February 27, 2012

குறிகாட்டுவானில் குவிந்த சிங்கள மக்கள்! மூச்சுத் திணறியது நயினாதீவு!!

கடந்த வாரம் தொடர்ச்சியாக வந்த விடுமுறையை அடுத்து நயினாதீவுக்கு சுற்றுலா செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்கு முறையில் குவிந்தனர் சிங்கள மக்கள்.

நயினாதீவில் உள்ள நாகவிகாரையைத் தரிசிப்பதற்காகவே இந்த மக்கள் இவ்வாறு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது குறிகாட்டுவானில் குவிந்து நிற்கின்றனர்.
நீண்ட வரிசையில் நிற்கும் இந்தச் சுற்றுலாப் பயணிகளை ஒழுங்கு முறைப்படி படகுகளில் ஏற்றுவதற்கு பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு நயினாதீவுக்கு வரும் தென்னிலங்ககைச் சுற்றுலாப் பயணிகள் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தையும் தரிசிக்கத் தவறுவதில்லை. இதனால் அப் பகுதிகள் எங்கும் திருவிழாக் காலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் போல் காட்சியளிக்கின்றது.

இதேவேளை கடந்த வாரம் ஒரு நாள் மட்டும் 13 ஆயிரம் பேர் நயினாதீவுக்கு வருகை தந்ததாக குறிகாட்டுவான்-நயினாதீவுக் கிடையிலான படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP