Sunday, February 5, 2012

அமரர் தியாகராஜா சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 5 பெப்ரவரி 2012
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையே உள்ளம் நிறைந்த ஆருயிர்த்தாயே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்ட நாளாய்
உன்னையே நினைந்து அழுகின்றோம் தாயே
மண்ணில் நல் மனம் போன்ற வாழ்வுதனைப் பெற்றாய்
கண்ணின் மணியாய் பிள்ளைகளை கருதி வளர்த்தீர்
எண்ணின் இனிக்கும் இனியதாயாய் மிளிர்ந்தீரம்மா
ஏணியாய் இருந்து எமை ஏற்றமுற வைத்தீர் தாயே
தாயாய் கிடைத்ததை எண்ணி நாளும் வியந்தோம்
சேயாய் உன் மடியில் தவழ்ந்து வளர்ந்தோம்
தந்தையைப் பிரிந்து தவியாய்த் தவித்திட
தந்தையுமாய் தாயுமாய் தாங்கி நீன்றீரம்மா
ஆண்டவன் தந்த அருட்கொடை நீங்கள்
அவணியில் பறிகொடுத்து தவிக்கின்றோம் நாளும்
சித்தம் குளிர்ந்திடும் உங்கள் சிரித்தமுகம்
நித்தம் கண்முன் காட்சி தருகின்றது
உற்ற உடன்பிறப்புக்களின் ஒப்பற்ற சகோதரி நீ
உயிருக்கு உயிராய் உடன்பிறப்புக்களை நேசித்தாய்
கண்ணோடு நின்று காட்சிதரும் தாயே
மண்ணோடு சென்று நீ மறைந்து விட்டாலும்
உன்னோடு அருகிருந்த இனிய நாட்கள்
இனி எப்போது வந்திடுமென ஏங்குகின்றோம் தாயே.
அன்னையின் நினைவுகளை என்றும் இதயங்களில்
சுமந்து வாழ்ந்திடும் அருமைப்பிள்ளைகள்,
மருமக்கள், சகோதரங்கள், பேரப்பிள்ளைகள்.

எமது குடும்பத்தின் குலவிளக்காய் இருந்து கடந்த 16.01.2011 அன்று சிவபதம் எய்திய எங்களின் அன்புத்தாய் அமரமாது திருமதி தியாகராஜா சரஸ்வதி அவர்களின் முதலாம் ஆண்டு பூர்வபக்கத் துவாதசி திதியை முன்னிட்டு எமது இல்லத்தில் பிதிர் தர்ப்பணமும், 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் Waldhaus Freizeithaus Meielen, Eichenweg 40, 3052 Zollikofen (zollikofen Landi க்கு அருகாமையில்) என்ற முகவரியில் பிரார்தனையும் நினைவஞ்சலியும் நடைபெறும்.
அன்னாரின் பிதுர்தர்பண பிரார்த்தனையில் பங்குபற்றி ஏகுமாறு எல்லோரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793113596
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764812139

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP