Sunday, January 29, 2012

தமிழைப்புதைக்கும் புங்குடுதீவு வைத்திய சாலை.!

தமிழ் மக்களின் அழிவுக்கும், அவர்களின் கலாசாரப் பிறழ்வுக்கும் அவர்கள் தான் காரணம் என்பது மறைமுகமான நிஜம். இருந்தும் நாங்கள் வேற்று இனத்தவர்கள் மீது பழியைப் போட்டு விட்டு இக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்கின்றோம்.
அதற்கு ஓர் உதாரணமாக, ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்பதற்காக இச் செய்தியினைத் தங்களுக்குத் தருகின்றோம்.

வைத்தியரே இல்லாத வைத்தியசாலையின் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தால், சிங்களத்தில் பாட்டுப் போகுது. எப்படியிருக்கின்றது நிலைமை?
மேற்படி தொலைபேசிக்கு தமிழ் பேசும் மக்களைத் தவிர வேறு எவரும் அழைப்பு எடுப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. அல்லது மேற்படி தொலைபேசிச் சேவை வழங்கும் சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனம் தமிழ் மொழிப் பாடலையும் இச் சேவைக்குள் உள்வாங்கியுள்ளது.
இருந்தும் இது எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு வைத்தியசாலை. சோகத்தின் மையமே மருத்துவமனை என்பார்கள். ஏனெனில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் முதல், அதன் தாக்கத்தால் உயிரிழப்பவர்கள் வரை அனைத்துச் சம்பவங்களும் சோகத்தின் உச்சத்தை காட்டி நிற்கின்றது.
இத்தனை நிகழ்வுகளும் இடம்பெறும் மருத்துவமனைத் தொலைபேசியில் பாட்டிசைக்க விடுவது, அங்கு பணியாற்றும் அத்தனை பணியாளர்களின் மனோநிலையை எடுத்துக் காட்டி நிற்கின்றது.
மனிதாபிமானம் அற்றவர்களாக, இரக்க சுபாவம் இல்லாதவர்களாகவே இம்

மருத்துவமனைப் பணியாளர்கள் இருப்பதற்கான ஆதாரமே இத் தொலைபேசியில் உரைக்கும் பாடல்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள மொழியில் இசைக்கும் பாட்டு ஒரு மொழி, ஒரு இனம், ஒரு நாடு, ஒரு மதம் என்பதை ஓங்கி ஒலிக்க விடுவதற்கு ஒப்பானதாகும்.
அத்துடன் ஒரு நோயாளியிடம் மேற்படி மருத்துவமனையின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி விட்டு அவரிடம் கொடுத்தபோது, நீங்கள் மாறி நம்பரை
னவே இப்படியான மக்கள் இருக்கும் பகுதியில்தான் தொலைபேசிக்குச் சிங்களப் பாடல் இசைக்க விட்டிருக்கின்றது மருத்துவமனை நிர்வாகம்.அடிச்சுப் போட்டிங்கள், சிங்களத்தில் ஏதோ சொல்லுறதைப் பார்த்தால் அது ஆமிக்காம்பின் நம்பர் போலக் கிடக்கு என்று கூறிய அவர் உடனே தொலைபேசியைத் துண்டித்து விட்டார்.
இதேவேளை இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள்

பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கேட்டபோது,
இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனவும், அவ்வாறு இருந்தால் தான் உடன் அதனை மாற்றியமைக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
அத்துடன் சிலவேளைகளில் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகளுக்கு இவ்வாறான பாட்டுக்கள் போடப்பட்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஆனால் தொலைபேசிப் பயனாளரின் விருப்பத்திற்கிணங்கவே அந்த தொலைபேசி நிறுவனம் இச் சேவையை வழங்குவதுடன், இச் சேவைக்கு மாதம் 50 ரூபாய் தொகையும் அறவிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேரடியாகப் புங்குடுதீவு வைத்தியசாலையில் சிங்களப் பாட்டு கேட்க விரும்பினால் 0094213205759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் இணைந்து இசையைக் கேட்டு மகிழுங்கள்.

நன்றி : ஈழ இணையம்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP