Thursday, January 26, 2012

- இந்தமண் எங்களின் சொந்தமண் - அரியரத்தினம் .

ஆதிக்குடி எங்கள் அழகான தமிழரென அகிலத்தில் வாழ்ந்திருந்தோம் - இன்று
நீதிக்குப் போராடும் நிலை ஒன்று வந்ததால் நிம்மதி தனை இழந்தோம்
சாதித்த புகழதும் சரித்திர வாழ்வதும் சந்ததி தான் கண்டது - நாங்கள்

போதித்த பொறுமையால் புகலிடம் பறிபோக புவிதனில் அகதியானோம்
வந்தேறு குடியான சிங்களர் வாழவே வகையாக வாழ்வளித்தோம் - அவர்
சொந்தமாய் எம்மண்ணைச் சுரண்டியது தெரியாது சுயமாக நாம் இருந்தோம்
ஆதிக்க வெறிகொண்ட அந்த ஒரு நிலையதில் அடங்கியே தான் போவதோ
 சாதி;க்கப் பிறந்திட்ட சந்ததி என்பதை சரித்திரம் மறந்து போமோ
எரிமலையாகவே மறவர்கள் கூட்டமது எதிரியைக் களமாடுவார் - அவர்
எரிநெருப்பாகவே பொங்கிடும் தீயினில் எதிர்காலம் தனை வெல்லுவார்
 தென்னை பனையோடு தேமாங்கனி என்று தேனாறு பாய்ந்த எங்கள்
 தெய்வத் தமிழ் ஈழம் தீப்பற்றி எரிகையுதே தேசங்கள் கேட்கவில்லையே
 பொய்மை உரைத்திடும் சிங்களம் சொல்கின்ற பொய்யுரை தனை நம்பியே
 எம்மை ஒழித்திட எத்தர்கள் தங்களுக்கு ஒத்தே உதவுகின்றார்
 செத்தே அனைவரும் ஒழிந்திட்ட போதிலும் செருகளம் தனை வெல்லுவோம்
சொத்தான எங்களின் சொந்த மண் மீட்டிடும் சுயகளம் தனை நாடுவோம்
அகிலம் முழுவதும் அணியாகத் திரள்கின்ற அன்பான இளையோர் கூட்டம்
 புதியதோர் பாதையில் புத்தொளி காட்டியே புதுயுகம் பிறக்க வைப்பார்
 உலகத் தமிழர்கள் ஒன்றாகச் சேர்ந்து நாம் உரிமைக் குரல் கொடுப்போம் - இருள்
 விலகின்ற நாள் வரை விண்ணை அதிர்ந்திடும் விலைவரை தந்து நிற்போம்
தொப்புள் கொடிகளின் துயர்நிலை கண்டும் நாம் தூக்கம் தனைக் கலைப்போம்
ஆக்கமாய்ச் செய்கின்ற பல வேள்வி தனைக்காண அனைவரும் ஒன்றாகுவோம்
 போக்கற்ற புல்லர்கள் புனைகின்ற தடைகளைப் புவிதனில் களைந்தாடுவோம்
புன்மை தவிர்த்திடப் புகலிடம் தன்னிலே போர்ப்படை தனைக் கூட்டுவோம்
அந்நியன் வந்ததால் எங்களின்மண் இன்று அடிமை விலங்கானதோ - அந்த
அநியாயம் செய்தவர் அழகாக வாழ்ந்திட அகதியாய் நாம் வாழ்வதோ
 சொந்தமாய் எங்களின் மண்ணைச் சுரண்டியோர் வாழ்கின்ற போதில் நாங்கள்
சுதந்திரத் தமிழ் மண்ணை சுயமாகத் திருப்பியே தந்திடும் வகை காணுவோம்
அந்த ஓர் நீதியைக் கேட்டு நாம் அகிலத்தில் அனைவரும் போராடுவோம்
 சொந்தமண் எங்களின் அந்தமண் சுதந்திரத் தமிழீழம் தனை வெல்லுவோம்:

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP