புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சரவணமுத்து குணாளினி பிரான்ஸில் மருத்துவத்துறையில் அதியுயர் விசேட மருத்துவக் கல்வியை முடித்துள்ளார்.
இதற்காக குணாளினிக்கு கடந்த ஆண்டு 31 ஆம் திகதி பரீசில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் ஒன்றிய தென்னங்கீற்று விழாவில் கௌரிவித்துப் பொன்னாடை போர்க்கப்பட்டது.
தமிழ் மக்களின் ஒரேயொரு மூலதனமான கல்வியைப் புலம்பெயர்ந்து சென்றும் கைவிடாது சாதனை புரிந்த குணாளினிக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment