புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா சற்குணம் அவர்கள் 04-01-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வெற்றிவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சாரதாதேவி(பிரான்ஸ்), கண்ணதாசன்(பிரான்ஸ்), சந்திராதேவி(இலங்கை), வரதராஜன்(சுவிஸ்), யோகலட்சுமி(ஜேர்மனி), தமிழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாலசுந்தரம்(பிரான்ஸ்), கெளரிமாலா(பிரான்ஸ்), தனஞ்செயன்(இலங்கை), சயந்தினி(சுவிஸ்), ஆனந்தகுமார்(ஜேர்மனி), குகனேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, காலஞ்சென்ற இராசரெத்தினம், காலஞ்சென்ற தங்கம்மா, செல்லத்துரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற பரமேஸ்வரி, மாணிக்கவாசகர்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
கஜன், கஜிதா, நதீரா, லக்ஸ்மன், நிதுஷா, நிதுஷியா, சங்கீதா, வசீகரன், ஆதவன், மதுஷன், கஸ்தூரி, அஸ்வின், ஆறோன், நவின்ன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று, புங்குடுதீவு முனேப்பலம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment