Thursday, January 5, 2012

எனது உள்ளத்திலிருந்து....


என் தளத்துக்கு தொடர்ந்து விஜயம் செய்யும் அன்புள்ளங்களுக்கு எனது வணக்கம். பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் சந்தோஷங்களையும் சிறப்பான முன்னேற்றங்களையும் கொண்டுவர இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
pungudutivu.info ஆனது ஆரம்பிக்கப்பட்டு 3 வருடமாக வெற்றிகரமாக பயணித்து கொண்டுள்ளது,இப் பயணத்துக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவு என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நான் எனது தளத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று இத்தளம், எம்மூர் மக்கள் எமது ஊரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், எமது ஊரில் உள்ள பாடசாலைகள்,ஆலயங்கள் மற்றும் எமது ஊரில் பிறந்து எம்மூருக்கு பெருமை சேர்த்த பிரபலங்கள், எம்மூரின் முன்னேறத்துக்காக உழைத்தவர்கள், எமக்கு
பாடம் புகட்டிய ஆசான்கள்,நடைமுறையில் நம்மூருகாக தொண்டாற்றிகொண்டிருப்பவர்கள் என அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டுமென்பதே எனது அவா!

இதையறிந்து நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பி வரும் தகவல்கள், செய்திகள், ஆக்கங்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகின்றேன். எனினும் நான் மேற்குறிப்பிட்ட விடயங்கள் இன்னும் போதிய அளவு கிடைக்காமையால் எனது தளம் முழுமையடையாதையிட்டு மனம் வருந்துகின்றேன். எனவே தயவு இவ்வாறான விபரங்களை தந்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்!

மேலும் எம்மூர் மக்கள் பற்றி குறிப்பிடும் போது காலநிர்பந்தத்தினால் கடல் கடந்து வாழ்ந்த போதும் பிறந்த ஊரையும், உறவுகளையும் என்றும் மறவாது தொண்டாற்றி வருகின்றார்கள், இதன் பிரதிபலிப்பாகவே புலம் பெயர்ந்து, வாழும் பல நாடுகளில் எம்மூரின் பெயரில் ஒன்றியங்கள் அமைத்து அதனூடாக தாய் நிலத்துக்கும், பிற நிலத்துக்கும் பல சேவையாற்றி வருவது மட்டுமின்றி தாம் வாழும் நாடுகளில் தனித்தனியாக வருடம்தோறும் பல நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி எம்மூருக்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள்.

இதன் அங்கமாக கடந்த 31.12.2011 அன்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட "தென்னங்கீற்று" கலைமாலையில் என்னையும் கௌரவிக்கப்பட்டதையிட்டு நானும் புங்குடுதீவில் பிறந்தவன் என்று சொல்லி கொள்வதில் கர்வம் கொள்கின்றேன், ஏனெனில் இந்த கௌரவம் புங்குடுதீவு என்ற ஒரு சொல்லுக்கு கிடைத்ததாகவே நான் கருதுகின்றேன்.

எனவே என்னையும் கௌரவித்ததுக்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன்  எனது தளத்துக்கு அதிக பார்வையாளர்களை கொண்டு வரும் லங்காசிறி இணையத்தளத்துக்கும் , மாறன் அண்ணா, லண்டனிலிருந்து கருணைலிங்கம் அண்ணா ,சுவிசிலிருந்து சிவபாலன் அண்ணா , இந்திரன் அண்ணா மற்றும் எனது தளத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP