குறிகாட்டுவான்-நயினாதீவுக்கு இடையிலான பாலப்பாதை வேலைகள் ஆரம்பம் .
குறிகாட்டுவான்,நயினாதீவுக்கு இடையிலான பாலம் விரைவில் வருமா? வராதா? என்று மக்கள் அனைவரும் ஏங்கிக் கொண்டு இருந்தனர் மக்களின் ஏக்கத்தை தணிக்க பாதை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக மேற்படி பாதைகள் கொண்டு வந்து போடப்பட்டு கிடப்பில் கிடந்ததும், இது தொடர்பில் பொதுமக்கள் பலதரப்பட்டவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப் பாதை விரைவில் அமைக்கப்பட்டால் மக்கள் அனைவரும் இலகுவான முறையில் பயணம் மேற் கொள்ளமுடியும் என்றும் மேலும் பொருட்களை சேதமற்ற முறையில் எடுத்துச் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment