Sunday, December 4, 2011

திருமதி நமசிவாயம் நாகம்மா அவர்கள்


தோற்றம் : 10 மே 1924 — மறைவு : 2 டிசெம்பர் 2011

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பண்டாரநாயக்கா மாவத்தை, கொழும்பு-12 ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் நாகம்மா அவர்கள் 02.12.2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாயகப்பிள்ளை அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம்(ஆறுமுகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, கனகரத்தினம், பாலசுப்பிரமணியம், தில்லையம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, தனபாக்கியம், அம்பலவாணர், இராசம்மா, காலஞ்சென்றவர்களான அருளம்பலம், கந்தையா, சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை, பொன்னாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கணேசமூர்த்தி, சோமசுந்தரிபிள்ளை, காலஞ்சென்ற நவமணி, கமலாம்பிகை, சண்முகநாதன், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கணபதிப்பிள்ளை மற்றும் தர்மபாலன், விக்கினேஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமாரன்-சுதர்சினி, ரவீந்திரன்-கயல்விழி, நிர்மலாதேவி-மோகன்ராஜ், அகிலாதேவி-கருணாகரன், விஜேந்திரன்-சுகிர்தா, ரஜீந்திரன், பகீந்திரன்-சுரேக்கா, சுஜீந்திரன், ரதிதேவி-ஸ்ரீதரன், உமாதேவி-ரகுநாதன், நவதாசன், விஜிதாதேவி-தங்கேஸ்வரன், பாலகுகன்-கவிதா, கவிதா-மயூரன், பார்த்தீபன், சுஜிபா, சுகிர்தா-விஜேந்திரன், லகிர்தா, காலஞ்சென்ற மயூர்தா, நிஷாந்தி, கஜரூபன், நேசரூபன், ருசியந்தன், பிரசாந்த், டயகாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03.12.2011 சனிக்கிழமையும், 04.12.2011 ஞாயிற்றுக்கிழமையும் பொரளை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04.12.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் 3:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தர்மபாலன்-கமலம்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94714808676
சண்முகநாதன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94776393641
ரவி(பேரன்) — கனடா
தொலைபேசி: +19056532433
செல்லிடப்பேசி: +16479725963

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP