Saturday, November 5, 2011

திரு பொன்னையா நாகரத்தினம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


திரு பொன்னையா நாகரத்தினம் புங்குடுதீவு - 3
திதி: 06/11/2011




ஆண்டொன்று சென்றாலும் ஆறிடுமோ எம் துயர்?
ஈருயிரும் ஒருயிருமாய் இருவரும் வாழ்ந்தோமே ஐயா!
உத்தமரே, ஐயாவே, நாம் இருவரும் சேர்ந்து , வாழ்ந்த நாட்களும்,
உந்தன் நிழலுருவமும் என் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும்
என் கண் முன்னே நிழலாடுதையா !


எங்கள் ஐயாவே, எங்கள் அன்புத் தெய்வமே,
எங்களுக்கு சீரும்,சிறப்போடும் வாழ்வமைத்த எங்கள் குல 
விளக்கே !
உங்களின் இனிமையான குரலோசையும்,
உங்களின் வெண்ணிறை ஆடையோடும், உங்களின் தூய உருவமும்
எங்களின் கண்முன்பே 
நிற்குதையா!

வருடம் ஒன்றாகினாலும் உங்களை எப்படி நாங்கள் மறப்போம்? மறக்கத்தான் முடியுமோ எம் தெய்வத்தின் திருவுருவம் ?

உங்களின் ஆத்மா சாந்திக்காக தினமும் இறைவனை பிராத்தித்து நிற்கின்றோம் ...



தகவல்: குடும்பத்தினர்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP