எங்கள் ஆலமர விருட்சமே
திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
தாயும் நீயே! தந்தையும் நீயே! குருவும் நீயே! எங்கள் குலவிளக்கும் நீயே!
தாயுமாய் தந்தையுமாயிருந்து தரணி போற்ற வாழ வைத்த தெய்வமே!ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்னைக்கு அன்னையாயிருந்து அமுது ஊட்டிய அன்னையே!
ஆசானாய் இருந்து அறிவு புகட்டிய குருவே!
இத்தனை சிறப்பையும் அளித்து அகிலம் போற்ற வாழ வைத்த எங்கள் அப்புவே!
நேர் கொண்ட பார்வை, நேரம் தவறாத செயல், தங்களின் கலீர் என்ற ஓசை,
வீர் கொண்ட நடை இவையெல்லாம் எம் மனதை விட்டு அகலவில்லை!
ஆனாலும் அருகிலில்லையே!
ஆண்டோ நான்காகி விட்டது உங்களை மறக்க முடியுமா ?
எம்உயிர் இவ்வுலகில் இருக்கும் வரை எங்கள் குல தெய்வமே, என்றும் உன்னை நினைத்து வணங்கி வாழ்வோமாக !!
உங்கள் ஆத்மா சாந்தியடைய அன்னை மகாமாரியின் துணையுடன் பிராத்திப்போமாக !
தகவல் குடும்பத்தினர்
.
0 comments:
Post a Comment