Monday, July 18, 2011

புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் கோவில் மஹாற்சவப் பெருவிழா.

புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி - ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 10.03.2011 வியாழக்கிழமை முதல் 19.03.2011 சனிக்கிழமை வரை 10 தினங்கள் வேத ஆகமவிதிப்படியும், மிகவும் சிறப்பாக மஹாற்சவப் பெருவிழா நடைபெற்றது.
இலங்கையில் மட்டுமன்றி கனடா, ஐரோப்பிய நாடுகளிலுமிருந்தும் பலமக்கள் விழாக்களில் பங்குபற்றி வழிபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. மஹோற்சவ பெருவிழாவின் முக்கிய அங்கமாக வேதகோஷங்கள் முழங்க, தேவார பண்ணிசைகள் ஓத, நாதஸ்வர தவில் இசை ஒலிக்க, மக்களின் பக்திபூர்வமான கோஷங்களோடும் சிறந்த அலங்காரத் தோற்றத்துடன் தேரில் பவனிவருகின்ற அருட்காட்சியளிப்பதும் சிறப்பாக இருந்தது. கனடாவிலிருந்து வருகைதந்த ஆலய முதல்வர், பிரதமகுரு சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ஆலய நிதழ்வுகளை சிறப்பாக ஒழுங்குசெய்திருந்தார்.

நடைபெற்ற விழாக்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.




மேலதிக படங்களை பார்க்க இங்கே அழுத்தவும் .
இப்படங்களை எமது தளத்துக்கு வழங்கியதற்காக சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் .


பட உதவி : சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்

GOD BLESS YOU "LET LOVE BIND US ALL TOGETHER"
 Dr. SivaSri Panchadchara Vijayakumara Kurukkal
 Chief Priest of the Temple & President of the Trustee Board
 Sri Varasiththi Vinaayagar Hindu Temple Of Toronto - Canada

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP