நயினாதீவு தனியார் படகுச் சேவைக் கட்டணம் அதிகரிப்பு: பயணிகள் பாதிப்பு
குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவுக்கும், நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்குமிடையில் தனியார் படகுக்கான ஒருவழிப் பாதைக் கட்டணம் 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் 20 ரூபாயாக இருந்த இக் கட்டணம் 13.06.2011 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்தால் எந்தவித எரிபொருள் கட்டணங்களும் அதிகரிக்கப்படாதபட்சத்தில் இவ்வாறான கட்டண உயர்வு நயினாதீவு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பில் வேலணை பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலனின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பயணத்திற்காக 48 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment