Monday, April 25, 2011

திரு பொன்னையா பத்மநாதன்.


யாழ் வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தை வதிவிடமாகவும், 212/3 வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 24-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா மற்றும் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அரியரட்ணம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயா, ஜெயந்தி, கெளரி, பிரமிளா, ஜெயபாஸ், பபிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன், ரூபன், சாள்ஸ், ஜெயபாலன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம், பூரணம் மற்றும் கமலாம்பிகை, இந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, சரோஜினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவராசா மற்றும் சிவபாதம், சுசிமலர் ஆகியோரின் அன்பு சகலனும்,

ரஜீப், சஞ்ஜீவ், டிசானி, சபிர்தா, அனஸ்ராஜ், ஜெசிக்கா, ஹரிஸ், ஜர்மி, தனுசன், துபிர்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 28-04-2011 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 01:30 மணிமுதல் 02:30 மணிவரை 212/3 சிவன் கோயில் வீதி, உக்குளாங்குளம், வவுனியா என்னும் முகவரியில் நடைபெற்று, பிற்பகல் 02:30 மணிக்கு தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94243240374
ஜெயகெளரி — கனடா
தொலைபேசி: +19052829229
ரஜீவ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774423837
பபிதாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33645848972

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP