Monday, April 25, 2011

திருமதி இராசையா அன்னம்மா

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட இராசையா அன்னம்மா அவர்கள் 24-04-2011 ஞாயிற்றகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி.நாகலிங்கம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாநிதி, புவனேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மபூபதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திரேசா, தில்லைச்செல்வம்(செல்வம் - பிரான்ஸ்), காலஞ்சென்ற பபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, வள்ளிப்பிள்ளை, மருதப்பு, பொன்னம்மா, நாகம்மா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, ஐயாத்துரை, மற்றும் யோகம்மா, காலஞ்சென்றவர்களான அருணாசலம், நாகநாதி, நாகம்மா ஆகியோரின் மைத்துனியும்,

பாரதி, புனிதா, புஷ்பா, கஜானந், பிரசானந், சஸ்பானந், யனுசிகா, ருசாந்திகா, தாரிகா, தர்சிகா, சஞ்ஜீவ், சுஜய் ஆயோரின் அருமை பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-04-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் ஜெயவர்த்தனபுர மலர்ச்சாலையில் நடைபெற்று, காலை 11.00 மணியளவில் பொரளை கனத்த மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி தில்லைச்செல்வம்(செல்வம்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148687389
- — இலங்கை
தொலைபேசி: +94112430845

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP