Friday, April 8, 2011

திருத்தப்பட்டு சேவைக்கு வந்து மறுநாளே பழுதடைந்த குமுதினி படகு.

நெடுந்தீவு - குறிகாட்டுவான் சேவையில் ஈடுபடும் குழுதினிப் படகு திருத்தம் செய்யப்பட்டுவரும் ஒவ்வொரு தடவையும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இரண்டொரு தினங்களில் மீண்டும் பழுதடைந்துவிடுவது வழக்கமாகியுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படகு பழுதடையும் போதெல்லாம் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுத் திருத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் திருத்தம்செய்து வந்தபின் சில தினங்களில் மீண்டும் பழுதாகிவிடுவதால் குழுதினி படகுச் சேவை அடிக்கடி சீர்குலைந்து விடுகின்றது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆளுநர், அமைச்சர், அரச அதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP